காரை நிறுத்தி வழக்கறிஞர்களிடம் கோரிக்கை மனு பெற்ற ஜெயலலிதா!சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், சென்னை தீவுத்திடல் அருகே சாலையோரம் கூடியிருந்த வழக்கறிஞர்களை பார்த்து காரை நிறுத்திய முதல்வர் ஜெயலலிதா, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.சென்னை தீவுத்திடல் அருகே தி்ண்டுக்கலை சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்றிருப்பதை கவனித்த முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்தினார். அப்போது, விவரங்களை கேட்டறிந்த முதல்வரிடம், வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் சேம்பர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட 2014-15ஆம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கையை பரிசீலிப்பதாக வழக்கறிஞர்களிடம் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு சென்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார்.
No comments:
Post a Comment