போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட தோழியை 3 வருடங்களாக முதுகில் சுமந்த 13 வயது சிறுமி
சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட
தனது தோழி ஒருவர் மூன்று வருடங்களாக தனது தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு
அழைத்து சென்று, மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்த் விடுகிறார்., தற்போது
அந்த சிறுமிக்கு சீனாவின் ‘China’s most beautiful student’ என்ற விருது
கிடைத்துள்ளது.
சீனாவின் உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த He Qin-jiao என்ற 13 வயது
சிறுமி ஒருவர், போலியோ நோயினால் தாக்கப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும்
தனது தோழியை தினமும் நான்கு மைல்கள் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு முதுகில்
சுமந்து கொண்டு அழைத்துக்கொண்டு செல்கின்றார். அவருடைய மனித நேயத்தையும்
நட்பின் ஆழத்தையும் பாராட்டி அவருக்கு சீன அரசு இந்த வருடத்தின் ‘China’s
most beautiful student’ என்ற விருதினை கொடுத்து கெளரவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய He Qin-jiao, தான் தன் தோழியை கடந்த மூன்று
வருடங்களாக முதுகில் சுமந்துகொண்டு பள்ளிக்கு அழைத்து செல்வதாகவும், தான்
ஒருபோதும் இந்த விருதுக்காக இந்த காரியத்தை செய்யவில்லை என்றும், மற்ற
குழந்தைகள் போலவே எனது தோழியும் கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணத்திற்காகவே
இந்த காரியத்தை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது சீன அரசு
பாதிக்கப்பட்ட அந்த தோழிக்கு மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை கொடுத்துள்ளது.
இதனால் He Qin-jiao என்ற மாணவியும் அவரது தோழியும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment