Thursday, 7 August 2014

இலங்கையில் தற்கொலைகளுக்கு ஊடகங்களே காரணமாம்! ஜனாதிபதியின் புதிய கண்டுபிடிப்பு

இலங்கையில் தற்கொலைகளுக்கு ஊடகங்களே காரணமாம்! ஜனாதிபதியின் புதிய கண்டுபிடிப்பு

தற்கொலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படுவதை விடுத்து மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் முக்கியஸ்தர்களை அலரி மாளிகையில் சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
சிறுவர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் விடயத்தில் நாம் உணர்வு பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும்.
சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் ஊடகங்கள் வெளியிடும் செய்தியும் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் தற்கொலை செய்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தன்னைச் சந்தித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நில்வள கங்கையில் சிறுமியொருத்தி தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் அந்தப் பகுதியில் இதுபோன்ற 5 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவைகள் தூண்டுதல்களால் அல்லது ஊக்கப்படுத்தல்களால் நடந்திருப்பதாகவே தெரிகிறது.
தற்கொலைகள் எப்போதும் சடுதியாகத் தீர்மானிக்கப்படுபவை. ஏதாவது தூண்டல்கள் இருந்தால் தற்கொலைக்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்தால் இது பழக்க மாகிவிடும். சின்னவிடயங்கள் கூட தற்கொலைக்கு முயற்சிக்கலாம். ஆகவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
mahi

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...