Sunday 10 August 2014

தாடி போல் வளர்ந்த கொழுப்பால் அவதிப்படும் ஸ்டீபன்

தாடி போல் வளர்ந்த கொழுப்பால் அவதிப்படும் ஸ்டீபன்

ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டீவன். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக வினோத நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார். இவருடைய முகத்தில் தாடிபோல் கொழுப்பு தேங்கிவிட்டது. அதன் தாக்கமாக கன்னமும், தாடையும் வீங்கிபோய் காணப்பட்டன. அதனால் கழுத்தைக் கூட திருப்ப முடியாமல் அவதிப்பட்டார். ‘மாட்லங்’ என்ற இந்த நோய் பாதிப்புக்கு பல்வேறு கட்ட சிகிச்சை மேற்கொண்டும் பலன் கிட்டவில்லை. இந்த நோய்க்குச் சிகிச்சை அளிப்பது மருத்துவ ரீதியாகவும் பிரச்சினையாக இருந்தது.
தற்போது பத்து ஆண்டுக்குப் பிறகு நவீன முறை சிகிச்சை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.
5 மணி நேர சிகிச்சைக்கு பிறகு ஸ்டீவன் முகத்தில் தங்கிய கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்டது. அந்த கொழுப்பு சுமார் 6 கிலோ எடை இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஸ்டீவன் கூறுகையில், ‘‘இந்த நோய் பாதிப்பினால் தலையைக் கூட அசைக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். எல்லோரும் என் முகத்தைப் பார்ப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்’’ என்றார்.
201408091719430335_Like-beard-grown-fat_SECVPF


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...