Thursday, 7 August 2014

இளைஞர்கள் இணையத்தளத்தில் நேரத்தை வீணாக்க வேண்டாம்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

இளைஞர்கள் இணையத்தளத்தில் நேரத்தை வீணாக்க வேண்டாம்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

 VATICAN-POPE-MEDIA-AUDIENCE
source: Tamil CNN. இளைஞர்கள் தங்களது பொன்னான நேரத்தை இணைய தளத்தில் வீணாக்க வேண்டாம் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார்களுக்கு பிரார்த்தனைகளில் உதவும் இளம் பாதிரியார்கள் சுமார் 50 ஆயிரம் பேர் புனித பயணமாக ரோம் நகருக்கு வந்தனர். அவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் சந்தித்து ஆசி வழங்கினார்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர்,
“இன்றைய இளைஞர்கள் தங்களது பொன்னான நேரத்தை இணையதளம், ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி போன்றவற்றில் வீணடித்து வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் தங்களது நேரத்தை தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை செலுத்தி பாழாக்குகின்றனர். நமது வாழ்க்கை காலத்தால் ஆனது.
காலம் நமக்கு கடவுள் வழங்கிய கொடை. அதனை தேவை இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி வீணடிக்கக் கூடாது. அவற்றை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். இணையதளம் அல்லது ஸ்மார்ட்போன்களில் சாட் செய்து கொண்டும், தொலைக்காட்சிகள் வீணான நிகழ்ச்சிகளை பார்ப்பதாலும் என்ன பயன் ஏற்படும்?
வாழ்க்கையை எளிமையாகவும், பயன் உள்ளதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். இணையதளம் இன்று கடவுள் நமக்கு அளித்த பரிசு. இருந்த போதிலும் இன்றைய வேகமான டிஜிட்டல் உலகத்தில் அவற்றை நாம் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...