பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறையைக் கண்டித்து கோயம்புத்தூரில் மனிதச் சங்கிலிப் போராட்டம்
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கோவை காந்திபுரத்தில் இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலின் தேசிய
தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில்
ஏராளமான தொழிலாளார்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, இஸ்ரேல் நாட்டுடன் கொண்டுள்ள ராணுவ உறவை இந்தியா கைவிட
வேண்டும் என்றும், காஸா மீதான தாக்குதலை உடனே கைவிட வேண்டும் என்றும்
போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment