Thursday, 12 June 2014

FIR போட மறுத்தால் உடனே இந்த 044 25615086 போன் நம்பருக்கு டயல் செய்து வாய்மொழியாகவே புகார் கொடுக்காலாம்.

 FIR போட மறுத்தால் உடனே இந்த 044 25615086 போன் நம்பருக்கு டயல் செய்து வாய்மொழியாகவே புகார் கொடுக்காலாம்.

இது தமிழக போலிஸ் வரலாற்றில் மிக முக்கியமான முன்னேற்றம்.
உங்களது கம்ப்ளையிண்டை எந்த போலிஸ் ஸ்டேசனிலாவது ஏற்றுக்கொள்ள மறுத்தால், FIR போட மறுத்தால் உடனே இந்த 044 25615086 போன் நம்பருக்கு டயல் செய்து வாய்மொழியாகவே புகார் கொடுக்காலாம். மேலும் உங்களது புகாரை ஏற்க மறுத்த அந்த இன்ஸ்பெக்டர்/சப் இன்ஸ்பெக்டர் மீதும் புகார் எடுத்துக்கொள்ளப்படும்.
இது சென்னைக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என இந்த நம்பருக்கு கால் செய்து புகார் கொடுத்த கோயம்புத்தூரை சேர்ந்த ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த திட்டம் நமது காவல் துறையில் அலட்சியப்போக்கை நிச்சயம் கண்டிக்க்கும். ஏற்கனவே இதுபோல புகார் எடுத்துக்கொள்ள மறுத்த பல இன்ஸ்பெக்டர்கள் கண்டிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கின்றனர். இதை நடைமுறைப்படுத்திய கமிஷ்னர் ஜார்ஜ் மற்றும் குழுவினருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டியது இனி நமது கைகளில் தான்.
எப்போதும் போல ஸ்டேசனுக்கு போனா கம்ப்ளெயிண்ட எடுக்க மாட்டானுங்க என்னத்துக்கு போயி..என புலம்பி சும்மா இருக்காமல் சட்டத்தின் உதவியை தயங்காமல் நாடுங்கள். கடமையை செய்ய தவறும் அதிகாரிகளை தயங்காமல் புகார் குடுங்கள். எல்லோரும் இதை கடைபிடிக்கத்துவங்கிவிட்டால் புகார் எடுக்க மறுக்கிறார்கள் என்ற ஒரு விசயமே வழக்கொழிந்துவிடும்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...