Tuesday, 3 June 2014

பிரிட்டன் நகர மேயராக இந்தியர் தேர்வு

பிரிட்டன் நகர மேயராக இந்தியர் தேர்வு

Source: Tamil CNN
 SUNIL1
பிரிட்டனின் சௌத்வார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.டில்லியைச் சேர்ந்த சுனில் சோப்ரா, பிரிட்டனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார்.
இவர் சௌத்வார்க் நகர துணை மேயராகவும் இருந்து வருகிறார். சவுத்வார்க் நகரின் மேயருக்கான தேர்தல் கடந்த 22-ஆம் திகதி நடைபெற்றது.அதில் அந்த நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனில் சோப்ரா வரும் 7-ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.
சுனில் சோப்ரா, சௌத்வார்க் நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். டில்லியில் சுனில் சோப்ரா படித்தபோது அந்த நகர இளைஞர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

No comments:

Post a Comment