Tuesday, 3 July 2012

கோட்டாறு மறைமாவட்ட பங்குகளில் நூலகம் தொடங்குவதற்கான கையேடு Designed by Mr. Vins Antro, Junior Scientist at ISRO, Parishioner of Murasancode.

கோட்டாறு மறைமாவட்ட பங்குகளில் நூலகம் தொடங்குவதற்கான கையேடு
வரிசை எண்
உள்ளடக்கம்
பக்கம்

நூலக குறிக்கோள்

நூலக பெயர்

நூலகத்தின் இலட்சினை

நூலக நிர்வாகம்

பொறுப்பாளரின் பணிகள் மற்றும் நூலக இயக்க முறை

நூலக விதிமுறைகள்

புரவலர் சேர்க்கை

நன்கொடை

வாசகர் வட்டம்

நூல்களின் பிரிவுகள்

நூலகத்திற்கான அடிப்படை பொருட்கள்

நூலகத்திற்கான குறைந்தபட்ச 300 நூல்கள்

நூலகத்திற்கான செலவுகள்

பரிந்துரைக்கப்படும் உலகை மாற்றிய மற்றும் புகழ் பெற்ற நூல்கள்

பிற சேர்க்கை

  1. நூலகத்தின் குறிக்கோள்கள்

  1. கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பங்கிலும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் செயல்படும் வகையில் ஒரு நூலகம் தொடங்குவது.
  2. படித்த பொதுநிலையினர் மற்றும் மறைக்கல்வி மாணவர்களை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது
  3. கிறித்தவம், மற்றும் சமூகம் சார்ந்த புத்தகங்களை பங்கு மக்கள் பயன்பாட்டுக்கு சேகரித்து பயன்படுத்துதல்.
  4. நூலகத்திற்கு புரவலர் சேர்த்து நூலக இயக்கத்தை வளர்த்தல்.
  5. நூலகத்தை சொந்த கட்டிடத்தில் செயல்படச் செய்தல்
  6. நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக நிதியை உருவாக்குதல்.

  1. நூலகத்தின் பெயர்
        ஒவ்வொரு பங்கிலும் செயல்படும் நூலகங்களுக்கும் தனித்த பெயர்களை சூட்ட வேண்டும். பெயர்களின் முடிவில் அறிவகம் என்று முடிவது மறைமாவட்டம் முழுமைக்கும் ஒரே சீரான பெயரில் இயங்குவதற்கு ஏதுவாக இருக்கும். நல்ல தமிழில் பெயர் சூட்டுவது வரவேற்கப்படுகிறது.

  1. நூலக இலட்சினை
        ஒவ்வொரு பங்கிலும் செயல்படும் நூலகத்திற்கென தனித்த இலட்சினை உருவாக்கப்பட வேண்டும். அந்த இலட்சினையாலேயே அந்த நூலகம் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இலட்சினை புத்தகம் வாசித்தல், அறிவு புரட்சி, நூலகம், வளர்ச்சி, குறிக்கோள் ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். இலட்சினையில் நூலகத்தின் குறிக்கோளை குறிக்கும் விதமாக ஒரு சொல்லோ, ஒரு வாக்கியமோ இடம் பெற வேண்டும்

  1. நூலக நிர்வாகம்
        பங்குகளில் நூலகம் நடத்துவதற்கு நூலக குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். நூலக குழுவின் தலைவராக பங்கு தந்தை இருப்பார். நூலக குழுவில் ஆர்வமுள்ள 5 முதல் 10 பேர் வரை இருக்கலாம். நூலகத்திற்கான நிதியை உருவாக்குவதும், நூலகம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், நூலக குறிக்கோள் மற்றும் நூலக விதிமுறைகள் பிறழாமல் பார்ப்பதும், புத்தகங்களை வாங்கும் பொறுப்பும் நூலக குழுவை சேர்ந்தது. நூலகத்தை தன்னார்வ சேவை மனமுடைய ஒருவர் அல்லது இருவர் நிரந்தரமாக  பராமரித்து வருவார். நூலக செயல்பாடுகள் அனைத்தையும் நூலக பொறுப்பாளரே பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் பங்குப்பேரவை நூலக வளர்ச்சி நிதி என்ற பெயரில் பங்கின் வருமானத்தில் 1% நூலகத்திற்கு ஒதுக்க வேண்டும். நூலக நிதியை நூலக பொறுப்பாளரோ அல்லது அதற்கென நியமிக்கப்பட்ட அர்வலரோ நிர்வகிக்க வேண்டும்.

  1. பொறுப்பாளரின் பணிகள் மற்றும் நூலக இயக்க முறை

    1. நூலகத்தை நூலக பொறுப்பாளர் ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் இரண்டு மணி நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும்.
    2. நூலகத்தில் சேர விரும்பும் பங்கு மக்களுக்கும், 5ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து மறைக்கல்வி மாணவர்களையும் நூலகத்தில் சேர்க்க உறுப்பினர் படிவம் நிரப்பி பொறுப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.
    3. பொறுப்பாளர் பங்கு மக்களிடம் ரூபாய் 20 ஆண்டு சந்தாவாக வசூலிக்க வேண்டும். மறைக்கல்வி மாணவர்களுக்கு சந்தா கிடையாது.
    4. நிரப்பிய படிவங்களை பொறுப்பாளர் உரிய கோப்பில் சேகரிக்க வேண்டும்.
    5. உறுப்பினர் படிவம் நிரப்பியவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். உறுப்பினர் அட்டைக்கு உரிய எண் வழங்கள வேண்டும். முதல் அன்பியத்திற்கு தொடக்கம் 101 என்ற எண்ணிலும், இரண்டாம் அன்பியத்திற்கு 201 என்ற எண்ணிலும் உறுப்பினர் அட்டை வரிசை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
    6. உறுப்பினர் அட்டையில் உறுப்பினர் எண், பெயர், விலாசம், வயது, அன்பியம் ஆகியவையும் நூலக பொறுப்பாளர் கையொப்பமும் இருக்க வேண்டும்
    7. புதிய புத்தகங்களுக்கு வரிசைப்படி எண்ணிட வேண்டும். எண்ணிட்ட புத்தகங்களை புத்தக பதிவேட்டில் புத்தகத்தின் எண், புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், விலை ஆகியவற்றை எழுத வேண்டும்.
    8. புத்தகத்தின் முதல் பக்கத்திலும், புத்தகத்தின் 25வது பக்கத்திலும் நூலக இலட்சினையை அச்சிட வேண்டும்.
    9. நன்கொடை புத்தகம் என்றால் பதிவேட்டில் பதிவேற்றிய பின்பு முதல் பக்கத்தில் நன்கொடையாளரை சிறப்பிக்கும் வகையில் நன்கொடையாளர் அச்சிட்டு அவர் பெயரை எழுத வேண்டும்.
    10. நூலின் பின் அட்டையின் உட்புறம் நூல் விபர அட்டையை வைக்கும் விதமாக காகித பை ஒட்ட வேண்டும்
    11. நூலின் முன் அட்டையின் உட்பக்கம் கடன் பெற்ற நூலை திரும்ப தரும் நாளை குறிப்பிடும் படிவத்தை ஒட்ட வேண்டும்.
    12. நூல்களை ஞாயிறு தோறும் பீரோவில் இருந்து எடுத்து இரண்டு அல்லது மூன்று பெஞ்சுகளில் வாசகர்கள் எளிதில் எடுக்கும் விதமாக பரப்பி வைக்க வேண்டும்.
    13. உறுப்பினர்கள் நூல்களை எடுக்கும் போது உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டு, புத்தகத்திலிருக்கும் நூல் விபர அட்டையை உறுப்பினர் அட்டையின் பின்புறம் இருக்கும் பையில் வைத்துவிட்டு, நூலில் திரும்ப தரும் நாளை அச்சிட்டுவிட்டு கொடுக்க வேண்டும்.
    14. ஒரு நூலை இரண்டு வாரங்கள் கடன் கொடுக்கும் வகையில் திரும்ப தரும் நாளை அச்சிட்டு கொடுக்க வேண்டும்.
    15. ஒவ்வொரு வாரமும் சேரும் உறுப்பினர் அட்டையை 9 அறை கொண்ட நெகிழி பெட்டியின் ஒரு அறையில் திரும்ப தரும் நாளை குறிப்பிட்டு கட்டி வைக்க வேண்டும்.
    16. நூலை வாசகர்கள் திரும்ப தரும் போது உறுப்பினர் அட்டை பையிலிருக்கும் நூல் விபர அட்டையை எடுத்து நூலில் வைத்துவிட்டு உறுப்பினர் அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
    17. நூலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையையும் பொருட்கள் இருப்பு பதிவேட்டில் பதிக்க வேண்டும்.
    18. பூச்சிகள் நூலை அரிக்காமல் இருப்பதற்கு தேவையான இரசாயனங்களை பீரோவில் போட்டு வைக்க வேண்டும்
    19. நூலக கணக்குகள் அனைத்தையும் கணக்கு புத்தகத்திலும் அதற்கான ரசீதை அதற்குரிய கோப்புகளிலும் பராமரிக்க வேண்டும்.

  1. நூலக விதிமுறைகள்

    1. நூலகத்தில் உள்ள அனைத்து பொருட்கள் மற்றும் நூல்களும் நூலகத்திற்க சொந்தமானது.
    2. நூலகம் ஞாயிறு திருப்பலி முடிந்த நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் மட்டுமே செயல்படும்.
    3. பங்கு மக்கள் மற்றும் மாணவர்கள் நூலக நேரத்தில் மட்டுமே நூல்களை கடன் பெறவும், திரும்ப ஒப்படைக்கவும் முடியும்.
    4. ஒரு உறுப்பினர் அட்டைக்கு ஒரு நூல் மட்டுமே கடன் கொடுக்கப்படும்.
    5. நூல்களை நூலகத்திலிருந்து கடனாக பெறுபவர்கள் உரிய காலத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கால தாமதமாக திருப்பி கொடுக்கப்படும் நூல்களுக்கு வாரத்திற்கு 10 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும்.
    6. நூல்களை சேதப்படுத்தினால் நூல்விலையில் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும்.
    7. உறுப்பினர் அட்டை பெற்றுள்ளவர்கள் மட்டுமே நூல்களை எடுக்க அனுமதிக்கப்படுவர்.
    8. உறுப்பினர் அட்டை தொலைந்தால் ரூபாய் 50 செலுத்தி புதிய அட்டையை வாங்கிக் கொள்ளலாம்.

  1. புரவலர் சோ்க்கை
நூலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 1000 (ஆயிரம்) வழங்கினால் நூலகப் புரவலர் பட்டயமும், ரூபாய் 5000 (ஐயாயிரம்) வழங்கினால் நூலகப் பெரும் புரவலர் பட்டயமும் வழங்கப்படும்.

  1. நன்கொடை
நூலகத்தின் வளர்ச்சிக்காக பொது மக்களிடமிருந்து நூல்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் நன்கொடையாக பெறப்படும்.

  1. வாசகர் வட்டம்
மறைமாவட்டத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் வாசகர் வட்டம் அமைக்கப்பட வேண்டும்.  வாசகர் வட்டத்தின் மூலமாக  நூலகத்திற்கு தேவையான நூல்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் நன்கொடையாக பெறலாம். எழுத்தாளர் பயிற்சிகள், பேச்சு பயிற்சிகள், ஆகியவை இந்த வாசகர் வட்டம் வழியாக நடத்தலாம். 

  1. நூலகத்தின் பிரிவுகள் 

  1. கிறித்தவ நூல்கள்
  2. சிறார் இலக்கியம்/குழந்தைகள் நூல்கள்
  3. தமிழக வரலாறு, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு
  4. சமூக நூல்கள்
  5. தன்னம்பிக்கை/ஆளுமை
  6. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்
  7. இதர மத நூல்கள்
  8. தத்துவங்கள்
  9. ஆங்கில நூல்கள்

  1. நூலகத்திற்கான அடிப்படை பொருட்கள்
    வரிசை எண்அடிப்படை பொருட்கள்பயன்பாடுஎண்
    ணிக்கை
    செலவு

    ஸ்டீல் பீரோநூல்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்கு 15000

    நூல்கள் பதிவேடுநூலகத்தில் உள்ள அனைத்து நூல்களின் முழு விபரங்களையும் ஆவணப்படுத்துவதற்கு150

    கணக்கு புத்தகம்நூலகத்தின் நிதியை பராமரிப்பதற்கு150

    உறுப்பினர் பதிவேடுஉறுப்பினர்களின் முழு விபரங்களையும் பராமரிப்பதற்கு150

    பொருட்கள் இருப்பு பதிவேடுநூலக பொருட்களின் இருப்பை பராமரிப்பதற்கு150

    கோப்புகள்உறுப்பினர் பதிவு படிவம், நூல்களின் செலவு பில்கள் ஆகியவற்றை சேகரிப்பதற்கு375

    நூலகத்திற்கான அச்சுநூல்களில் நூலகத்தின் இலட்சினையை பொறிப்பதற்கு1150

    தேதி அச்சுகடன் பெற்ற நூலை திரும்ப ஒப்படைப்பதற்கான தேதியை பொறிப்பதற்கு175

    நன்கொடையாளர் அச்சுநூலகத்திற்கு நன்கொடையாக நூல்களை வழங்கியவர்களின் விபரத்தை நூல்களில் அச்சிடுவதற்கு1150

    புத்தக விபரம் அச்சுபுத்தக எண், ஆசிரியர், பதிப்பகம் போன்ற விபரங்களை நூலில் அச்சிடுவதற்கு1150

    உறுப்பினர் அட்டைஉறுப்பினர் பெயர், வயது, பாலினம், அன்பியம், முகவரி உள்ளடக்கிய அட்டை500300

    உறுப்பினர் அட்டை கூடுஉறுப்பினர் அட்டை சேதப்படாமல் இருப்பதற்கும், நூல் விபர அட்டையை வைப்பதற்கான பையுடன் கூடிய நெகிழி கூடு5001500

    நூல்விபர அட்டைநூல்களின் பின் அட்டையின் உள்புறம் பையில் வைக்கும் புத்தகத்தின் விபரத்துடன் கூடிய அட்டை1000450

    நூல் அட்டை வைக்கும் காகித பைநூல்களின் பின் அட்டையின் உள்புறம் ஒட்டும் காகித பை. நூல் விபர அட்டையை வைக்க பயன்படும்1000500

    கடன் தேதி பதிக்கும் படிவம்உறுப்பினர்கள் நூலை திரும்ப தரும் நாளை குறிக்கும் படிவம். நூலின் முன் அட்டையின் உள்புறம் ஒட்டுவது.1000450

    உறுப்பினர் சேர்க்கை படிவம்உறுப்பினர்கள் சேர்க்கை படிவம்500300

    9 அறை உறுப்பினர் அட்டை  சேமிப்பு பெட்டிநூல் கடன் பெற்ற உறுப்பினர்களின் உறுப்பினர் அட்டையை சேகரிக்கும் பெட்டி. 175

    பெவிக்கால்காகித பை, கடன் தேதி பதிக்கும் படிவம், மற்றும் சேதமடைந்த புத்தகங்களை ஒட்டுவதற்கு. சாதாரண பசைகளை உபயோகித்தால் புத்தகங்கள் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும்.1100

    பேணாநூலகத்தின் பயன்பாட்டிற்காக115

    ஸடேப்ளர்நூலக பயன்பாட்டிற்காக150

    Punchநூலக பயன்பாட்டிற்காக150

    Stamp Padநூலக பயன்பாட்டிற்காக150

    நெகிழி பெட்டிஅடிப்படை பொருட்களை சிதறாமல் சேகரிப்பதற்காக5250
    மொத்தம்
    9890

    1. நூலகத்திற்கான குறைந்தபட்ச 300 நூல்கள்
      வரிசை எண்நூலின் பெயர்ஆசிரியர்பதிப்பகம்விலை


      1. நூலகம் தொடங்குவதற்கான செலவுகள்
              நூலகம் தொடங்குவதற்கு நூல்களும், மற்றும் தரவு 7ல் குறிப்பிட்டுள்ளபடியான அடிப்படை பொருட்களும் தேவைப்படுகின்றன.

        1. அடிப்படை பொருட்கள் (ரூபாய்)    = 9890.00
        2. நூல்கள் (ரூபாய்)            = 20,000.00
                  மொத்தம்    = 30,000

      1. பரிந்துரைக்கப்படும் உலகை மாற்றிய மற்றும் புகழ் பெற்ற நூல்கள் பட்டியல்
      வரிசை எண்நூலின் பெயர்ஆசிரியர்பதிப்பகம்விலை

      1. பிற சேர்க்கை

        1. மாதிரி உறுப்பினர் அட்டை
        2. மாதிரி உறுப்பினர் படிவம்
        3. மாதிரி நூல் விபர அட்டை
        4. மாதிரி கடன் தேதி விபர அட்டை
        5. மாதிரி காகித பை
        6. மாதிரி இலச்சினை
        7. மாதிரி நூல் அச்சு
        8. மாதிரி நன்கொடையாளர் அச்சு
        9. மாதிரி புத்தக விபரம் அச்சு
        10. மாதிரி 9 அறை நெகிழி பெட்டி

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...