Saturday 23 February 2013

கறுப்புக் கண்ணாடி

கறுப்புக் கண்ணாடி

கொளுத்தும் வெயிலிலிருந்து நம் கண்களைக் காக்க நாம் அணியும் கறுப்புக் கண்ணாடிகள் அல்லது, பல வண்ண குளிர்விக்கும் கண்ணாடிகள், 13ம் நூற்றாண்டில் சீனாவில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அந்நாட்டின் நீதி மன்றங்களில் நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து, வழக்குகளை விசாரித்தனர். நீதிபதியின் கண்வழி வெளியாகும் உணர்வுகள் மூலம் அவரது எண்ணங்களை மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதற்காக, நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்தனர்.
பனி சூழ்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்கள், பனியின் உக்கிரத்தால் தங்கள் பார்வையை இழக்காமல் இருக்க, நேர்கோட்டில் அமைந்த ஓர் ஓட்டை கொண்ட உலோகத் தகடுகளைக் கண்ணாடி போன்று அணிந்தனர். 1932ம் ஆண்டுமுதல், அமெரிக்க விமானப் படைவீரர்கள் சூரிய ஒளியின் மிகுதியைக் கட்டுப்படுத்த, கறுப்புக் கண்ணாடி அணிந்தனர்.
சூரியனிலிருந்து வெளியாகும் ultraviolet rays எனப்படும் புறநீலக்கதிர்கள் கண்களை அடையாமல் தடுக்கும் சக்திகொண்ட கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறுகின்றனர். பல வண்ணங்களில் குளிர்விக்கும் கண்ணாடிகள் அணிவது, தற்போது இளையோரிடையே நாகரீக அடையாளமெனக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment