Saturday 23 February 2013

இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!


தமிழ் பெண்கள் மீது இலங்கை படையினர் பாலியல் வல்லுறவு புரிந்து அவர்களுக்கு பாடம் புகட்டியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் 140 பக்கங்கள் கொண்ட வருடாந்த அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது.
பாலியல் வன்முறை, கற்பழிப்பு, மற்றும் மூன்றாம் நிலை சித்திரவதை போன்ற கொடூரமான சம்பவங்கள் இலங்கை படைகளால் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2006 தொடக்கம் 2012வரை இவ்வாறான 75 சம்பவங்கள் பதிவாகியுள்ளதென கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச உயர்தர விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் உந்துதல்களால் இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்து இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு பாதிக்கப்பட்ட 31 வயது தமிழ் பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த பெண் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு அங்கு தாக்கி சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment