Wednesday, 6 February 2013

காளான்

காளான்
காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைதாவர உயிரினம் ஆகும். காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவுவரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன. நாய்க்குடைக் காளான், முட்டைக் காளான்,  சிப்பிக்காளான்,  பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகை ஆகும்.
காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.
மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டியை, காளானிலிருந்து அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9%, புரதச்சத்து 35% உள்ளது. எனவே இதயத்தைக் காக்கும் உணவாக காளான் உள்ளது. இவைத் தவிர, காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து, மூட்டுவாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணி.
பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்றுநோயை சுமார் 64 விழுக்காடுவரைத் தடுக்கும் வல்லமை இந்தக் காளானுக்கு உண்டாம்.
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...