Tuesday, 11 December 2012

பாரதியின் பிறந்தநாள் 11 - 12 - 2012


பாரதியின் பிறந்தநாள் 11 - 12 - 2012

பிராமண சமசுகிருதத்தின்
பிறப்புறுப்பில் நெருப்பு வைத்து
தமிழை தமிழர்களுக்கு
உரித்தாக்கியவன்.
பிராமணானகப் பிறந்தாலும்
பிராமணீயத்தை, அதன் வெறியினை
தாக்கியவன்.

எந்தவோர் நிலையிலும் தன்மதிப்பு
இழக்காதவன்.
தன் மதிப்புக்காக தன்னையே இழந்தாலும்
தலை குனியாதவன்.

இந்திய மண்ணில் எழுந்துவந்த
புரட்சிகர தேசிய முதாளிய வர்க்கத்தை
தன் கவிதைகளால் தமிழில் வைத்தவன்
அதே வேளை
புரட்சிகர தேசிய முதலாளிய வர்க்கம்
புல்லரித்து செல்லரித்து
புரட்சிகர அக்டோபர் புரட்சிக்கே வழிவிடுமென
ரஷ்யப் புரட்சியை வாழ்த்திப் பாடியவன்.

தலித் ஒருவனுக்கு பூணூல் அணிவித்தான்
பாதை தெரியாத காட்டில் அவன்
பார்த்த வழி அதுதான்!
கழுதை ஒன்றை அணைத்து முத்தமிட்ட
கருணையும், மனித நேயமும் உள்ளவன்.

எத்தனையோ இளைய நெஞ்சங்களில்
தமிழன்பை உருவாக்கியவன்
தமிழை புத்துலக மொழியாக
கருவாக்கியவன்.

வாழ்க பாரதி! வாழ்க அவன் பெயர்!!
 தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாள
ில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம்.
இன்று 131-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள்.
பெயர்: சுப்பிரமணிய பாரதி.
இதரப்பெயர்கள்: மகாகவி, பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882.
இறப்பு: செப்டம்பர் 11 , 1921.
வாழ்ந்த காலம்: 38 ஆண்டுகள், 11 மாதங்கள், 1 நாள்.
பெற்றோர்: சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள்.
மனைவி: செல்லம்மா.
திருமணம் நடந்த ஆண்டு: 1897.
மகள்கள்: சகுந்தலா, தங்கம்மாள்.
வாழ்ந்த இடங்கள்: எட்டையபுரம் (1882 – பிறந்த ஊர்), காசி (1898 முதல் 1902 வரை), மதுரை (1904, சிறிது காலம் – தமிழ் ஆசிரியராக), புதுச்சேரி (1908 முதல் 1918 வரை – முக்கிய மற்றும் பிரபல படைப்புகள் உதிர்த்த இடம்), கடையம் (1918 – முதல் 1920 வரை – மனைவி செல்லம்மாவின் கிராமம்), சென்னை (1921 – மறைந்த இடம்).
பரிணாமங்கள்: கவிஞர், சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், எழுத்தாளர், விடுதலை வீரர், தேச பத்தர், பெண்ணுரிமைப் போராளி.
அறிந்த மொழிகள்: தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் மற்றும் ஆங்கிலம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...