வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்
இதனிடையே, வைகோ மீதான பொடா குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என மத்திய சீராய்வு கமிட்டி 2004ல் முடிவு செய்தது. சீராய்வு கமிட்டி முடிவை அடுத்து பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
ஆனால் வழக்கை வாபஸ் பெறும் தமிழக அரசின் முடிவை பொடா நீதிமன்றம் ஏற்க மறுத்தது. பொடா நீதிமன்றம் முடிவை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வைகோ மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment