இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஜமாத் உத்-தவா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அத்துமீறிய தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திவிட்டு, இந்தியா தொல்லை தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை தீவிரவாத இயக்கமான ஜமாத் உத்-தவா கேட்டுக் கொண்டுள்ளது.
கராச்சி நகரில் பத்திரிகையாளர் மன்றம் அருகே ஜமாத் உத்-தவா தீவிரவாத இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கூடியிருந்த பேரணியில் அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் கலந்துகொண்டு உரையாற்றினான். மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவரான இவனை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் உள்ளான்.
பேரணியில் ஹபீஸ் சயீத் பேசுகையில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் துப்பாக்கி சண்டைக்கு கண்டனம் தெரிவித்தான். இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானை சேர்ந்த அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றம்சாட்டினான். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்’ என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சர்வதேச எல்லை விதியை இந்தியா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள் இவ்விவகாரத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜமாத்-உத்-தவா அமைப்பின் கராச்சி தலைவர் முசம்மில் இக்பால் ஹஷ்மி பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான கொள்கையின் ஒரு பகுதியாகவே சியால்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்புகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக உள்ளனர். என்று கூறினார். இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள, நாட்டு மக்கள் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைக்கு பின்னால் நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேரணியில் கலந்து கொண்ட மற்றவர்கள், அமெரிக்கா துணையுடன் இந்தியா, சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்திவருகிறது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டும். இந்தியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும், நாட்டின் பாதுகாப்புக்காக அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. என்று கூறியுள்ளனர்.
Source: Tamil CNN.

No comments:
Post a Comment