பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயை தடுக்கும் சில வழிமுறைகள்
மார்பகப் புற்றுநோய்க்கு மதுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மதுப்பழக்கத்தை அறவே கைவிட்டு, பழச்சாறுகள் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குத் தான் அதிக அளவில் மார்பகப் புற்றுநோய் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அளவு குறைவதால், மார்பகப் புற்றுநோயின் தாக்கமும் குறைவு தான்.
பெண்கள் தங்கள் உடல் எடை அதிகரிக்காத அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாதவிலக்கு அறவே நின்ற பிறகு பெண்களின் எடை தாறுமாறாக எகிற நிறைய வாய்ப்புள்ளது. இதனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம்.
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகள் அதிகமாகச் சேர்த்தால் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புக்கள் அதிகம். எனவே பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமே உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment