Saturday 21 December 2013

மங்கள்யான் பேஸ்புக்கிற்கு அமோக வரவேற்பு – தனி பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களைத் திறந்தது இஸ்ரோ

மங்கள்யான் பேஸ்புக்கிற்கு அமோக வரவேற்பு – தனி பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களைத் திறந்தது இஸ்ரோ

Source: Tamil CNN மங்கள்யான் ஃபேஸ்புக் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இஸ்ரோவுக்கென அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.மங்கள்யான் விண்கலத் திட்டம் தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்தை இஸ்ரோ தொடங்கியது.
கடந்த 2 மாதங்களில் இந்தப் பக்கத்தைப் பின்தொடருவோரின் எண்ணிக்கை சுமார் 3 லட்சமாக அதிகரித்துள்ளது.இந்தப் பக்கத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பையடுத்து, தமக்கென அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
புதிய விண்வெளித் திட்டங்கள், சாதனைகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்கள் வெளியிடப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இதன்மூலம் இஸ்ரோவுக்கும், நாட்டு மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றும், அதிகமான மக்களுக்கு விண்வெளி தொடர்பான செய்திகளை கொண்டு செல்ல முடியும் என்றும் இஸ்ரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இஸ்ரோ பெயரிலான போலி பக்கங்களில் வெளியாகும் தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...