Sunday, 22 December 2013

தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை

தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை

Source: Tamil CNN
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என்பதை விளம்பர, பெயர்ப்பலகைகள் கூட உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சீனாவின் ஆதிக்கமும், சீன மொழியும் வியாபித்து வந்தாலும், தமிழ் மொழி இங்கே ஓரங்கப்பட்டப்படுவது தமிழர்கள் மத்தியில் மனவேதனையையும், அதிருப்தியையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் நாலாபக்கமும் சீன மொழியும், சீன சந்தைகளும், சீனர்களும் நாளுக்கு நாள் வியாபித்து வருகின்றனர். குறிப்பாக சாதாரண அறிவித்தல் பலகைகளில்கூட சீன மொழி இடம்பிடிக்கும் அளவிற்கு ஆதிக்கம் வலுவடைந்து வருகிறது.
இதற்கு தெற்கின் கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகை சாட்சியாக இருக்கிறது. சீனர்களின் இனப்பரம்பல் அதிகரித்து வருவதை இது சித்தரிப்பதாகக் கூறப்படுகிறது.
சீனர்கள் அதிகம் வரும் கடற்கரையாக இருந்தால் சீன மொழியும் அறிவித்தல் பலகையில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துபவர்கள், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கான விளக்கத்தையும் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் முதற்படியாக மொழிக் கொள்கை அமைந்துள்ளது. இலங்கையில் மும்மொழிக் கொள்கை இருந்துவரும் நிலையில், இவ்வாறு விளம்பரம் அல்லாத பொது அறிவித்தல் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி ஆக்கிரமித்துள்ளமையானது எதிர்கால இலங்கையின் நிலை குறித்து தெளிவாக எடுத்தியம்புகிறது.
மூன்றாவதாக எழுதப்பட்டுள்ள சீன மொழி, எதிர்காலத்தில் முதல்நிலைக்கு வரும் நிலை ஏற்படும் என்பதுடன் அடுத்த 50 வருடங்களில் சீனர்கள் இலங்கையின் அரசியலில் நேரடியாக தடம்பதிக்கும் நிலையையும் எவரும் தடுக்க முடியாது என்பது திண்ணமாகும்.
chines_langue_001

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...