Saturday 21 December 2013

அண்டார்டிகா மலைகளில் கொட்டிக்கிடக்கும் வைரப் படிவங்கள்

அண்டார்டிகா மலைகளில் கொட்டிக்கிடக்கும் வைரப் படிவங்கள்

Source: Tamil CNN 
அண்டார்டிகா பனிப்பிரதேச மலைகளில் வைரப் படிவங்கள் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கிழக்கு அண்டார்டிகாவில் கிம்பர்லைட் வகைப் பாறைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அங்கு வைரப் படிவங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிரிக்கா, சைபீரியா, அவுஸ்திரேலியா பகுதிகளில் கிம்பர்லைட் பாறைகள் கண்டறியப்பட்ட இடங்களில்தான் வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வர்த்தக ரீதியாக அண்டார்டிகா பகுதியில் கனிமங்கள் தோண்டியெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கிம்பர்லைட் எனப்படும் எரிமலைக் கற்களில் வைரங்கள் உள்ளன. இவ்வகைக் கற்கள் பூமியில் அரிதாகவே உள்ளன. அண்டார்டிகாவில் கிம்பர்லைட் பாறைகள் கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தலைமையிலான குழு இதனைக் கண்டறிந்துள்ளது.
இது ஆய்வாளர்கள் கூறுகையில், இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர், அண்டார்டிகா, அரேபியா ஆகியபகுதிகள் இணைந்திருந்த பெருங்கண்டம் கோண்டுவானா என அழைக்கப்பட்டது.
தற்போதுள்ள புவியமைப்புப்படி கண்டங்கள் பிரிந்ததில் இளவரசர் சார்லஸ் மலைப்பகுதி அண்டார்டிகாவில் உள்ள லம்பெர்ட் பள்ளத்தாக்குடன் இணைந்து விட்டது. அப்பகுதியில்தான் கிம்பர்லைட் பாறைப்படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...