Friday 20 December 2013

அமெரிக்காவில் கன்னிகளுக்கு பிறக்கும் மர்மக்குழந்தைகள்

அமெரிக்காவில் கன்னிகளுக்கு பிறக்கும் மர்மக்குழந்தைகள்

Source: Tamil CNN 
அமெரிக்காவிலுள்ள 200 பெண்களில் ஒருவர் கன்னியாக இருக்கும்போதே கர்ப்பமடைந்துள்ளதாக பிரிட்டன் மருத்துவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த ஆய்வை இளம் பெண்களிடம் நீண்டகாலம் நடத்திய மருத்துவர்கள் குழு இந்த பிரம்மிக்க வைக்கும் நம்பமுடியாத தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்காக 15 வயது முதல் 28 வயது வரையிலான 7870 சிறுமி மற்றும் இளம்பெண்களிடம் ரகசிய ஆராய்ச்சிகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இதில் 45 பேர் தாங்கள் எந்த ஆணுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளாத போதே கர்ப்பமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் செயற்கை கருவூட்டல் முறையை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் சிலர் தவறாக கருவுற்றதையும், கருக்கலைந்து போனதையும் அப்போது அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கன்னியின் கர்ப்பம் குறித்து உலகம் முழுவதும் விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பழமைவாத கிறிஸ்தவ குழுவினர் திருமணத்திற்கு பிறகே குழந்தைகள் பிறக்கவேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர்.
பிள்ளைப்பேறு அடைய 21 வயது 7 மாதங்கள் வயது வரம்பு உள்ளபோது, இந்த கன்னித்தாய்கள் அதைவிட இரண்டு வயது குறைவாக இருந்துள்ளனர். கன்னிகள் கர்ப்பமடைவது குறித்து ஆதி காலம் தொட்டு கூறப்பட்டாலும், கர்ப்பத்தின் வரலாறு மற்றும் உடலுறவு மூலம் கர்ப்பமடைதல் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...