கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'குடும்பத்தின் அழைப்பு' என்ற கருத்தின் கீழ், ஆறு தலைப்புகளில் விளக்கங்களை வழங்கியுள்ளார். இதில், 'திருமணம் எனும் அருளடையாளம்' என்ற மூன்றாம் தலைப்பின்கீழ் 72ம் பத்தியில் விளக்கிக் கூறியுள்ள கருத்துக்கள் இதோ:
திருமணம் எனும் அருளடையாளம் ஒரு சமுதாய பழக்கவழக்கமல்ல, அதாவது, பொருளற்ற ஒரு சடங்குமுறையோ, அர்ப்பணத்தின் வெளி அடையாளமோ அல்ல. இந்த அருளடையாளம் தம்பதியரின் புனிதத்துவத்திற்காகவும், மீட்புக்காகவும் கொடையாக வழங்கப்படுவது. ஏனெனில், அவர்கள் ஒருவருக்கொருவர் உரிமையில் உடமையானவர்கள் என்பது, திருஅவைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவும் இதே உறவின் உண்மை பிரதிநிதித்துவமாக, அருளடையாளத்தின் வழியாக உள்ளனர். சிலுவையில் என்ன நடந்தது என்பதன் நிரந்தர நினைவூட்டலை திருஅவைக்கு வழங்குவதாக, திருமணமான தம்பதியர் உள்ளனர். அவர்கள் ஒருவர் ஒருவருக்கும், தங்கள் குழந்தைகளுக்கும், அருளடையாளத்தின் வழியாக பங்குபெறும் மீட்பின் சாட்சிகளாக உள்ளனர். திருமணம் என்பது ஓர் அழைத்தல். அதேவேளை, மணவாழ்வுக்குரிய அன்பை அனுபவிக்க தம்பதியருக்கு விடப்பட்டுள்ள இந்த அழைப்பு, திருஅவைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவும் அன்பையொத்த வேறுபட்ட அழைப்பாகும். ஆகவே, திருமணம் புரிந்து குடும்பத்தை உருவாக்குவதற்கான முடிவு, அதற்குரிய அழைப்பு குறித்த விவேகமான சிந்தனைகளின் வழி எடுக்கப்படவேண்டும். (அன்பின் மகிழ்வு 72)
No comments:
Post a Comment