Friday 21 November 2014

ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆஸியில் தங்க அனுமதியில்லை :ஸ்கொட் மொரிசன்

ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆஸியில் தங்க அனுமதியில்லை :ஸ்கொட் மொரிசன்

downloadSource: Tamil CNN. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்கள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதி வழங்குவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நாட்டு குடிவரவு மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் குடியேற்ற ஆட்கடத்தல் வியாபாரிகள் தற்போது முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த தீர்மானத்து எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் இவ்வாறு இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...