Saturday, 22 November 2014

அரசு ஆவணங்களை திருடி வெளியிட்டதால் ஆயுள் தண்டனையை எதிர் நோக்கி சீன பத்திரிகையாளர்

அரசு ஆவணங்களை திருடி வெளியிட்டதால் ஆயுள் தண்டனையை எதிர் நோக்கி சீன பத்திரிகையாளர்

Chinese-journalist-Gao-Yu-faces-life-sentence-for-leaking_SECVPFSource: Tamil CNN. சீனாவை சேர்ந்த பத்திரிகையாளர் காவ் யு (வயது 70) கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை ரகசிய ஆவணங்களை திருடி வெளிநாட்டு இணையதளத்தில் வெளியிட்டதாக கடந்த் ஏப்ரல் மாதம் கைது செய்யப்ட்டார். கைதான 2 வாரங்களுக்கு பிறகு டெலிவிஷனில் தோன்றி தனது குற்றங்களை அவர் ஒப்புகொண்டார். ”நான் சட்ட சிக்கல்களான விவகாரங்களை தொட்டுள்ளேன் என நம்புகிறேன்.
இதனால் நாட்டின நலன்கள் பாதிக்கப்படும்.உண்மையில் நான் செய்தது மிகவும் தவறு. இந்த குற்றத்தை நான் ஏற்று கொள்கிறேன்.” என்று கூறினார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் நடந்து வந்தது. டெலிவிஷனில் தான் கூறிய வாக்கு மூலத்தை கோர்ட்டில் அவர் மறுத்தார்.
தனது மகன் ஜாவோ மெங் ஏப்ரல் மாதம் மரணமடைந்ததில் இருந்து தான் மன அழுத்ததில் இருப்பதாக கூறினார். இருந்தாலும் காவுக்கு நீதி மன்ரம் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...