Friday 28 November 2014

காரே அலுவலகமானால்! அசத்தும் தொழிநுட்பம்

காரே அலுவலகமானால்! அசத்தும் தொழிநுட்பம்

Source: Tamil CNN. அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று தினசரி வாழ்க்கை போரடித்துவிட்டதா?
உங்களுக்காகவே ஒரு புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறது கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘இடியோ’ (Ideo) எனும் நிறுவனம்.
அந்தத் தொழில் நுட்பம், அலுவலகம் – வீடு இரண்டும் சேர்ந்த கார். கார் போன்று இருந்தாலும் நல்ல பெரிய ஒரு அறை போன்று காட்சியளிக்கும் இதில், அலுவலகத்துக்குத் தேவையான அத்தனை அம்சமும் இடம்பெற்றிருக்கிறது.
பார்க்கிங் வசதியுள்ள எந்த இடத்திலும் இதனை நிறுத்திக் கொள்ளலாம். உதாரணத்துக்குத் திங்கட்கிழமை பீச், செவ்வாய்கிழமை பார்க் என வெவ்வேறு இடங்களை அலுவலகமாக்கி வேலை நாட்களை ஜாலி நாட்களாக்கிக் கொள்ளலாம்.
முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்த வாகனத்துக்கு, ஸ்டீயரிங் கிடையாது. இதில் டிரான்ஸ்பரன்ட் வசதியும் உண்டு. எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டர் மூலம் குறிப்பிட்டுவிட்டால், அந்த இடத்துக்குப் போய் நிற்கும். டிராஃபிக் பிரச்னையே இல்லை. எந்த நேரத்தில் எப்படி இயங்க வேண்டும் என்பதை இதன் மெமரியில் பதிவேற்றபட்டுள்ளது.
இந்தத் தொழில் நுட்பம் கொஞ்சம் ‘அப்டேட்’ செய்யப்பட்டு, கடையில் இருந்து வாடிக்கையாளர் முகவரிக்குப் பொருட்களைக் கொடுத்து அனுப்புவது, டிரைவரே இல்லாமல் வாகனம் ஒட்டிச் செல்வது, வீடாகவும் பயன்படுத்துவது போன்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லாமே இதில் சாத்தியமாக்க இருக்கிறார்கள்.
ideo car middle 1
ideo car middle 2

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...