Friday, 21 November 2014

ஆசியாவின் தலைவர்கள் மாநாடு! இலங்கைக்கு முக்கிய பிரமுகர்கள் வருகை

ஆசியாவின் தலைவர்கள் மாநாடு! இலங்கைக்கு முக்கிய பிரமுகர்கள் வருகை

conference_logoSource: Tamil CNN. சீன-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெறும் ஆசியதலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கிய பிரமுகர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர். சீனாவின் பெய்ஜிங் நகரை முன்னிலைப்படுத்திய பொஆஓ பொருளாதார மாநாட்டின் முதலாவது அமர்வு நாளை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சீன அரசாங்கத்தின் பொருளாதார மூலோபாய திட்டமான பட்டுப்பாதை திட்டம் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கென சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் செங்க் பெய்யேன் தலைமையிலான 40 பேர் அடங்கிய குழுவினர் இன்று மாலை விசேட விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்கள் பகுதியில் இவர்களை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட அரசாங்கத்தின் சார்பில் வரவேற்றார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட மாநாட்டின் ஏற்பாட்டாளராக கடமையாற்றுகின்றார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...