Friday, 21 November 2014

இந்தோனேசியாவில் போலீசில் சேர பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு

இந்தோனேசியாவில் போலீசில் சேர பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு

57bec9f9-b39a-40f4-9a06-4c94d3723668_S_secvpfஇந்தோனேசியா போலீசிலும் பெண்கள் படை உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏராளமான பெண் போலீசார் தேர்வு நடந்தது. 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. அதில், பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்காக பெண் போலீசுக்கு தேர்வானவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது.
பெண் டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்தனர். கன்னித்தன்மை இருப்பவர்கள் மட்டுமே போலீசில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த சோதனைக்கு பெண் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதை அரசு கண்டுகொள்ளவில்லை. சோதனையின்போது பல பெண்கள் கதறி அழுதனர்.
இந்த விஷயம் தற்போது சர்வேதச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...