பிபிசி இணையதளத்தை முடக்கியது சீனா
இந்நிலையில் நேற்று மிளகாய் பொடி தூவி மற்றும் தடியால் கொடூரமாகத் தாக்கியும் போராட்டக்காரர்களை ஹாங்காங் காவல்துறையினர், விரட்டி அடிக்க முயன்றனர்.
இந்த நிகழ்வுகளை பிபிசி உள்பட பல்வேறு ஊடகங்கள் உலகம் முழுவதும் வெளியிட்டன. மேலும் கடந்த 28ம் தேதி முதல் நடைபெறும் போராட்டங்கள் குறித்த தகவல்கள் வெளிநாட்டு ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
இதன்காரணமாக ஹாங்ஹாங்கில், சீனாவின் அடக்குமுறைகள் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வெளியாகிவரும் பிபிசி இணையதளத்தை சீனாவில் முடக்கியுள்ளது. இதேபோல் நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தையும், சீனா மொழியில் வெளியாகும் பிபிசி இணையளத்தையும் முடக்கியுள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹாங் லீ கூறுகையில், “சீனா இணையதளங்களை முழு சுதந்திரமாக இயங்க அனுமதிக்கிறது.ஆனால் அதே நேரத்தில் சீனாவின் சட்டத்திற்கு உட்பட்டே இணையதளங்களை நிர்வகிக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment