Saturday, 3 August 2013

உலகின் மிகப்பெரிய தட்டையான உப்பு நிலப் பகுதி

உலகின் மிகப்பெரிய தட்டையான உப்பு நிலப் பகுதி

10,582 சதுர கிலோ மீட்டர் அல்லது 4,086 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள Salar de Uyuni உப்பு நிலப் பகுதி, உலகின் மிகப்பெரிய தட்டையான உப்பு நிலப் பகுதியாகும். இது, தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தென்மேற்கே, ஆன்டெஸ் மலை முகடுகளுக்கு அருகில், Potosí மற்றும் Oruro பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த உப்புநிலப் பகுதி கடல்மட்டத்தைவிட 3,656 மீட்டர் அல்லது 11,995 அடி உயரத்தில் உள்ளது. இந்த Salar பகுதி முழுவதிலும் ஒரு மீட்டர் முதல் பல்வேறு அளவுகளில் உப்புப் படிந்துள்ளது. இங்கு 50 முதல் 70 விழுக்காட்டு lithium கனிம வளம் நிரம்பியுள்ளது. உலகில் கிடைக்கும் லித்தியம் கனிமத்தில் 43 விழுக்காட்டை அதாவது 90 இலட்சம் டன்களை பொலிவியா நாடு கொண்டுள்ளது. லித்தியம் மின்கலங்களில் முக்கிய கனிமப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், Salar உப்புநிலப் பகுதியில், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய கனிமங்களும் கிடைக்கின்றன. Salar de Uyuni, 10 பில்லியன் டன்கள் அளவிலான உப்பைக் கொண்டிருக்கிறது. இந்த உப்புநிலப் பகுதி, வரலாற்றுக்கு முந்தைய பல ஏரிகளுக்கிடையே நடந்த உருமாற்றங்களால் உருவானது. ஏறக்குறைய 30 ஆயிரம் முதல் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக்கு முந்தைய Minchin ஏரியின் ஒரு பாகமாக இது இருந்தது. இந்த ஏரி பின்னர் Tauca ஏரியாக மாறி, 140 மீட்டர் ஆழத்தைக் கொண்டிருந்தது. இது, 14,900 முதல் 26,100 ஆண்டுகளுக்கு முந்தையது. அதற்குப் பின்னர் இது Coipasa ஏரியாக மாறியது. பின்னர் இந்த ஏரி காய்ந்து இரு சிறு ஏரிகளாக உரு மாறியது. இறுதியில் இவை Salar de Uyuni உப்பு பாலைநிலத்தை உருவாக்கியுள்ளது. இங்கு காலநிலை நவம்பர் முதல் சனவரி வரை 21 டிகிரி செல்சியுசாகவும், ஜூனில் 13 டிகிரி செல்சியுசாகவும் இருக்கின்றது. இரவில் ஆண்டு முழுவதும் குளிராக,-9 டிகிரியிலிருந்து 5 டிகிரியாக இருக்கின்றது.

ஆதாரம் : விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...