Wednesday, 28 August 2013

ப‌ஞ்ச‌ காரணங்கள்

ப‌ஞ்ச‌ காரணங்கள்

ஐ‌ந்து எ‌ன்பது சமஸ்கிருதத்தில் பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் இணை‌த்து அழை‌க்‌கிறோ‌ம்.
நில‌ம்நீ‌ர்தீகா‌ற்று, ஆகாய‌ம் என ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.
மெ‌ய், வா‌ய், க‌ண், மூ‌க்கு, செ‌வி என ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்.
வாழை‌ப்பழ‌ம், ச‌ர்‌க்கரை, தே‌ன், நெ‌ய், பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் இவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.
நா‌‌ள், திதி, யோக‌ம், கரண‌ம், ந‌ட்ச‌த்‌திர‌ம் எ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.
மு‌த்து, வைர‌ம், மரகத‌ம், நீல‌ம், பொ‌ன் ஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச இர‌த்‌தின‌ம்.
ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுக விளக்கு என்று அழைப்பர்.
ஜீலம், சீனாப், இரவி, சட்லஜ், பியாஸ் ஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.
நட்பைப் பிரித்தல், பகை நட்டல், அடுத்துக் கெடுத்தல், பெற்றதை இழத்தல், ஆராய்ந்து செயல் புரிதல் என ஐந்து விடயங்களைத் தெரிவிப்பனவே பஞ்ச தந்திரக் கதைகள்.
ஐந்து உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரம் பஞ்சபாத்திரம் எனப்படுகிறது.
கறுப்பு, வெள்ளை, சிகப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்கள் இணைந்து பஞ்ச வர்ணம் (பஞ்சவர்ணக் கிளி) எனப்படுகின்றது.
தர்மன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் என்ற ஐந்து சகோதரர்களும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.

ஆதாரம்  :   இருவர் உள்ளம் இணையதளம்/விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...