கறிவேப்பிலை
உணவின்
வாசனையைக் கூட்டுவதறகு மட்டுமே கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்
கருதுகின்றனர். ஆனால் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக
அண்மை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும்,
கறிவேப்பிலையில் அமினோ அமிலங்களும் உள்ளன. இவையே கறிவேப்பிலைக்கு இனிய
மணத்தைத் தருகின்றன. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகின்றன.
இந்திய சமையலில் வாசனைக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரல், இதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணெயாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள மருத்துவ ஆய்வு நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது.
இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும், அறிவைப்
பெருக்கவும் உதவுகிறது கறிவேப்பிலை. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று
தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆதாரம் : இருவர் உள்ளம் இணையதளம்
No comments:
Post a Comment