Friday, 30 August 2013

31 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்த 30 வயது காமுகன் கைது - பெங்களூர் பொலிசார்

31 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்த 30 வயது காமுகன் கைது - பெங்களூர் பொலிசார்

Source: Tamil CNN
குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்த நபர் ஒருவரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளாக பார்த்து கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அவர் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்ட அவர் மீது ஒரு பலாத்கார வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ளவை கடத்தல் வழக்குகளாக பதிவானது. அந்த நபர் சிறுமிகளை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதன் பிறகு சிறுமிகள் எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நபரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர். பொலிஸ் விசாரணையில் தான் 31 சிறுமிகளை கடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர அவர் பைக்குகள், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடியது, பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 சிறுமிகளை கடத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...