லிங்க முத்ரா (Linga Mudra)
கட்டை விரல், நெருப்பு அல்லது சூரியனையும், ஆள்காட்டி விரல் காற்று அல்லது வாயுவையும், நடுவிரல் விண்வெளியையும், மோதிர விரல் பூமியையும், சுண்டு
விரல் தண்ணீரையும் குறிக்கின்றன. முத்ராக்கள் என்ற நமது கைவிரல்களைப்
பல்வேறு முறைகளில் வைக்கும் பயிற்சிமூலம் இந்த ஐந்து ஆக்கக்கூறுகளும் நமது
உடலில் கட்டுப்படுத்தப்படுவதோடு பல உடல் நோய்களும் குணமாகின்றன.
முத்ராக்களை எந்த நிலையிலும் செய்யலாம். ஆனால் பத்மாசனத்தில்(அல்லதுsukhasan) செய்வது
நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று யோகா ஆசிரியர்கள் சொல்கின்றனர். இந்த
முத்ராக்களை குறைந்தது 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்ய வேண்டும்.
இவற்றில் சில முத்ராக்களை இரு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.
இரண்டு கைகளும் ஒன்றிணையும்போது உடலிலுள்ள பல்வேறு கூறுகள்மீது கவனம்
செலுத்தப்படுகின்றது. அத்துடன், அவற்றின் இயக்கங்களும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. Linga முத்ராவைச் செய்வதன்மூலம் உடலிலுள்ள நெருப்புக் கூறின்மீது கவனம் செலுத்தப்படுகிறது.
Linga முத்ரா செய்யும் முறை : இரண்டு உள்ளங்கைகளையும் இணைத்து விரல்களை ஒன்றோடொன்று பின்னி வைத்து, இடதுகையின்
கட்டைவிரலை நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும். அவ்விரலை வலது கையின்
கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் வளைத்துப் பிடித்திருக்குமாறு
வைத்திருக்க வேண்டும்
Linga முத்ராவின்
பலன்கள் : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ஜலதோஷம் மற்றும்
நுரையீரல் பாதிப்புக்களுக்கான எதிர்ப்புச் சக்தியையும், வெப்பநிலை
மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சக்தியையும் அளிக்கிறது. நுரையீரலுக்குச்
சக்தியைக் கொடுக்கிறது. உடலில் வெப்பத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை
எரித்து விடுகிறது.
இந்த முத்ராவைச் செய்யும்போது பழச்சாறும், ஒரு நாளைக்கு குறைந்தது 8 குவளைத் தண்ணீரும் குடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment