Wednesday, 28 August 2013

புளியமரம்

புளியமரம்

புளியமர இலை சிறந்த ஆயுர்வேத மருந்துப் பொருளாக சித்தமருத்துவத்தில் பயன்படுகிறது. இது வயிற்றைச் சுத்தப்படுத்தி கிருமிகளை அழிக்கிறது. இது இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. புளியை, மாலைவேளையில் சிறிது புளியாகாரம் செய்து சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கங்கள் மேம்படும்.
புளி, பித்தநீரால் ஏற்பட்ட கோளாறுகளுக்குச் சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புளி இலைகளை மூலிகைத் தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தலாம். புளி, உடலில் உள்ள கொழுப்பு அளவுகளைக் குறைத்து, இதயத்தை நலமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நீர்த்த புளிச்சாறு தொண்டையில் ஏற்படும் புண்னைக் குணமாக்குகிறது. புளி இலைகளைக் காபித் தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களைக் குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். புளி இலை சேர்த்த காபி, குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கின்றது. வைட்டமின் சி பற்றாக்குறையைப் புளியம்பழம் சரிசெய்கிறது. முக்கியமாக தோலில் ஏற்படும் ஒவ்வாமையைக் குணமாக்கும். ஆக்ஸிஜனேற்றத்திற்கு நல்ல ஆதாரமாக புளி இருப்பதால் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இது உதவி புரிகிறது.
புளியங்கொழுந்தைப் பக்குவப்படுத்தி உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. புளியங்கொழுந்தை தேவையான அளவு எடுத்து அத்துடன் பருப்பு சேர்த்து கூட்டுபோன்று செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். புளியங்கொழுந்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் கண் தொடர்பான பிணிகள் அகலும். பாண்டுரோகத்தைக் குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. உள்வெளி இரணங்களைக் குணமாக்குவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். 

ஆதாரம் : Panipulam.net
 

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...