Wednesday, 21 August 2013

எவரெஸ்ட் மலைச் சிகரம் : சாதனைகள்

எவரெஸ்ட் மலைச் சிகரம் : சாதனைகள்

உலகில் வடதுருவம், தென்துருவம் என்ற இரு துருவங்களை அடுத்து, மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுவது, உலகிலேயே மிக உயர்ந்த இடம் என்று கருதப்படும் எவரெஸ்ட் மலைச் சிகரம். கடல் மட்டத்திலிருந்து இச்சிகரம் 8,848 மீட்டர், அதாவது, 29,029 அடி உயரமானது. உலகின் வடதுருவத்தை 1909ம் ஆண்டும், தென்துருவத்தை 1911ம் ஆண்டும் மனிதர்கள் சென்றடைந்தனர். ஆனால், மூன்றாவது துருவமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய கூடுதலாக 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த Edmund Hillaryம் நேபாள இந்தியரான Tenzing Norgayம் இந்தச் சாதனையை முதல் முறை செய்தனர்.
இவர்களைத்  தொடர்ந்து, இதுவரை இச்சிகரத்தை 3142 வீரர்கள் எட்டிப்பிடித்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தை அடைவதில் பல்வேறு உலகச் சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Junko Tabei என்பவர் 1975ம் ஆண்டு இச்சிகரத்தை அடைந்த முதல் பெண் வீரர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Jordan Romero 2010ம் ஆண்டு இச்சிகரத்தை அடைந்தபோது அவரது வயது 13. நேபாளத்தைச் சேர்ந்த Ming Kipa என்பவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இளம்பெண் என்ற சாதனையை தன் 15வது வயதில், இவ்வாண்டு மே 24ம் தேதி படைத்தார். அதற்கு முந்தின நாள், அதாவது, 2013ம் ஆண்டு மே 23ம் தேதி 80 ஆண்டுகளைக் கடந்த ஜப்பானின் Yuichiro Miura என்பவர்  எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, உலகச் சாதனை படைத்த மிக அதிக வயதானவர் என்ற புகழைப் பெற்றார். இவர் தனது 70ம் வயதிலும், 75ம் வயதிலும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Wikipedia / National Geographic
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...