Saturday, 3 August 2013

சீனாவில் 140 ஆண்டுகளில் இல்லாத கடும் வெப்பம்:ரேஷன் அடிப்படையில் நீர் விநியோகம்

சீனாவில் வரலாறு காணாத கடும் வெப்பம் காரணமாக நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ரேஷன் முறையில் தண்ணீர் விடப்படுகிறது. சீனாவில் 140 ஆண்டுகால வரலாற்றில் வெயிலின் தாக்கம் மோசமாக உள்ளது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுவிட்டன. இதனால், சீன மக்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அந்நாட்டு அரசு ரேஷன் முறையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட அளவு குடிநீரை விநியோகித்து வருகிறது. நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு வருவதால், ஏராளமான நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருவது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...