Wednesday, 11 June 2014

ஆழ்ந்த தூக்கம் நினைவாற்றல், படிப்பறிவை மேம்படுத்தும்: ஆய்வில் தகவல்

ஆழ்ந்த தூக்கம் நினைவாற்றல், படிப்பறிவை மேம்படுத்தும்: ஆய்வில் தகவல்

 sleep

Source: Tamil CNn. ஆழ்ந்து அயர்ந்த நிலையில் தூங்குவது உடல் நலத்துக்கு சிறந்தது என்று பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது நினைவாற்றல் மற்றும் படிப்பு நிலையும் மேம்படுத்தும் திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது. எலிகளிடம் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஆழ்ந்து நன்றாக தூங்கிய எலிகள் பயிற்சிகளை மிக எளிதாக கற்றுக் கொண்டன.
அதே போன்று ஆழ்ந்து தூங்கும் மனிதர்களின் நினைவற்றலும், கல்வி அறிவும் மேம்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆழ்ந்த தூக்கம் நியூரான்களுக்கு இடையே புதிய இணைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நினைவாற்றல் தூண்டப்படுகிறது.
எலியின் மூளையில் மைக்ராஸ்கோப் மூலம் பார்த்த போது இது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் சரியான தூக்கம் இல்லாத எலிகளிடம் நினைவாற்றல் சக்தி குறைவாக காணப்பட்டது.
எனவே, குழந்தைகளை நன்றாக தூங்க வைப்பதன் மூலம் அவர்களின் கல்வி, அறிவு திறன் மேம்படும் என நியூயார்க் பல்கலைக் கழக பேராசிரியர் எவன்– பயோ ஞான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment