இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி தருகிறது - இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் - Vatican Radio News
மார்ச் 02,2011. இச்செவ்வாயன்று இந்திய பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையைக் குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப்.
இந்தியா இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில், விவசாயிகள், வரிசெலுத்துவோர், மற்றும் வயது முதிர்ந்தோர் என்று அனைத்துத் தரப்பினரையும் மனதில் கொண்டு இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்று அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
2011-2012க்கான நிதியறிக்கை எவ்வகையிலும் வரலாறு படைக்கவில்லையெனினும், வலுவிழந்த சமுதாயத்தை மனதில் கொண்டு வரையப்பட்டுள்ள இவ்வறிக்கை திருப்தியைத் தருகிறதென்று அருள்தந்தை கூறினார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த இந்த நிதி அறிக்கையை எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும், இடது சாரி கட்சிகளும் கண்டனம் செய்துள்ளன.
7. இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் மாநிலங்கள் தேர்தல்களைப் புறக்கணிக்க முடிவு - Vatican Radio News
மார்ச் 02,2011. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் கூறியுள்ளன.
அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, வங்காளம், மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல் நாட்களை இந்திய தேர்தல் ஆணையம் இச்செவ்வாய்க் கிழமை அறிவிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், இவ்வமைப்புக்கள் தங்கள் கூட்டங்களை நடத்தி, செய்தியாளர்களிடம் தங்கள் முடிவுகளைத் தெரிவித்தனர்.
தலித் கிறிஸ்தவர்களின் தேசிய அவை மற்றும் அனைத்திந்திய Pasmanda Muslim Mahaz ஆகிய இரு அமைப்புக்களும் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த தலித்துக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் இத்தேர்தல்களைத் தாங்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
தமிழ் நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளுக்கு எவ்வகையிலும் ஆதரவு தராததால், அக்கட்சிக்கு தங்கள் வாக்கு இல்லையென்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினர் மற்றும் தலித் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை காச்மன் ஆரோக்கியராஜ் கூறினார்.
No comments:
Post a Comment