சமத்துவமற்றநிலைகளின் சவால்களை எதிர்கொள்ள Laudato si'
தாவோஸ் நகரில், மே இஞ்ஞாயிறு முதல் 26, வியாழன் வரை உலக பொருளாதார அமைப்பு, மாநாடு ஒன்றை நடத்தி வருகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பு, மாநாடு ஒன்றைத் துவக்கி நடத்திவரும்வேளை, இவ்வுலகத்தின் சமத்துவமற்றநிலைகள் முன்வைக்கும் சவால்களை, Laudato si' திருமடலின் உதவியோடு எதிர்கொள்ள முடியும் என்று, உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் (UISG) பொதுச் செயலர் அருள்சகோதரி Patricia Murray கூறியுள்ளார்.
மே 22, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள ஐந்து நாள் மாநாட்டில், கோவிட்-19 பெருந்தொற்று, மற்றும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் ஆகிய இரண்டும் உருவாக்கியுள்ள நெருக்கடிகளுக்குப் பதிலிறுப்பது குறித்து, கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
WEF எனப்படும் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெற்றுவரும் தாவோஸ் நகரில், உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதியகம், உலகின் கத்தோலிக்க துறவுக் குழுமங்களோடு இணைந்து, உலகில் நிலவும் சமத்துவமற்றநிலைகளைக் களைவது குறித்த கலந்துரையாடல்களை நடத்தி, தங்களின் ஆலோசனைகளையும் அம்மாநாட்டிற்கு வழங்கி வருகிறது. இந்தக் கலந்துரையாடல்களில் பங்குபெறும் அருள்சகோதரி Patricia Murray அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், தொழிலதிபர்களோடு துறவு சபைகள் கலந்துரையாடல் நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
இந்த உலக பொருளாதார மாநாட்டில் இடம்பெறும் கருத்துப்பரிமாற்றங்கள், உரைகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை தான் மிகவும் வரவேற்பதாகவும், தாங்களும் இதே நகரில் மற்றொரு கலந்துரையாடல்களை மேற்கொள்வதால், தங்களின் கருத்துக்களை அம்மாநாட்டினருக்கு உடனுக்குடன் எடுத்துச்சொல்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும், அருள்சகோதரி Murray அவர்கள் கூறியுள்ளார்.
சமுதாயங்களில் மிகவும் உதவி தேவைப்படுவோர், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், கடும் ஏழ்மையில் வாழ்வோர், நலவாழ்வில் அல்லது கல்வி வசதி பற்றாக்குறைவை எதிர்கொள்வோர் போன்றோருக்கு, எண்ணற்ற அருள்சகோதரிகள் உலகெங்கும் பணியாற்றி வருகின்றனர், இவர்கள் சார்பாக எங்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க இந்த உலக பொருளாதார மாநாடு உதவியாக உள்ளது என்றும், அருள்சகோதரி Murray அவர்கள் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தற்போது உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் போன்று, WEF அமைப்பு, தன் ஐம்பது வருட வரலாற்றில் சந்தித்ததில்லை என்று, அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment