பேரிஜம் ஏரி
ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2வது இடத்தை பெற்றுள்ள பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பேரிஜம் ஏரி, தமிழ்நாட்டின் கொடைக்கானல், மோயர்முனைப் பகுதியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. பேரிஜம் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2வது இடத்தை பெற்றுள்ளது. கொடைக்கானல் நகரில் இருந்து மோயர் பாய்ண்ட் பகுதி சோதனைச் சாவடி வழியாக தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் லேக் வியூ, மதிகெட்டான் சோலை ஆகிய பகுதிகளைக் கடந்து சென்றால், பசுமையான பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ள பேரிஜம் ஏரியை அடையலாம். இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். இதனுள்ளே காட்டெருமைகள், மற்றும் சிறுத்தைகள் ஏரியில் தண்ணீர் பருக அவ்வபோது வந்து செல்லும். நெருப்பு கோபுரம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் மருத்துவ காடு ஆகிய தலங்கள் இந்த ஏரியின் அருகில் இருப்பது இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது.
வாகனங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இப்பகுதியின் இயற்கை சூழலை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment