Tuesday, 10 May 2022

சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி ஏரி

 

சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி ஏரி

பனமரத்துப்பட்டி ஏரி, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், சேலம் மாவட்டத்தில், 1911ம் ஆண்டில், 9.68 இலட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது. இந்த ஏரி 248 மீட்டர் நீளம், மற்றும், 306 மீட்டர் ஆழத்தையும் கொண்டிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

தமிழ்நாட்டின் சேலம் அருகே உள்ள மலைபாங்கான இடம் ஜருகுமலை. இதன் அடிவாரத்தில், 1908ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், 2,139 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்றை அமைப்பதற்கு சேலம் மாநகராட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 1911ம் ஆண்டில், 9.68 இலட்சம் ரூபாய் செலவில் அந்த ஏரி அமைத்து முடிக்கப்பட்டது. அதுவே பனமரத்துப்பட்டி ஏரியாகும் (Panamarathupatti lake). 1,248 மீட்டர் நீளம், மற்றும், 306 மீட்டர் ஆழத்தையும் கொண்டிருக்கும் இந்த ஏரிக்கு வரட்டாறு, கூட்டாறு (Varattaru, Kootaru) ஆகிய இரண்டிலிருந்தும் நீர் வரும்படி அது வடிவமைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தின் வேடந்தாங்கல் எனவும் அழைக்கப்படும் இந்த ஏரியில், குறிப்பிட்ட காலங்களில் ஏராளமான பறவைகள் வந்து தங்குகின்றன. இந்த ஏரி நீர், சேலம் மாநகர், ராசிபுரம் நகராட்சி, மல்லூர் மற்றும் பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்குக் குடிநீராக விநியோகம் செய்யப்பட்டது. மேலும், மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தார் நிறையத் திரைப்படங்களை இங்கு எடுத்தனர். சேலத்தில் இருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பனமரத்துப்பட்டி ஏரியிலுள்ள மீன்கள் மிகவும் ருசியாக இருக்குமாம். மேலும், 1952ம் ஆண்டில் மேட்டூர் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்வரை, சேலம் மாநகராட்சிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி அமைந்திருந்தது. சேலம் மாநகர் பகுதிக்கு 1924ம் ஆண்டுவாக்கில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் அன்றையிலிருந்து பனமரத்துப்பட்டி ஏரி பராமரிப்பை சேலம் மாநகராட்சி கைவிட்டது. இந்நிலையில்தான் தண்ணீர் வரத்தின்றி ஏரி வறண்டது. அதன் பின்னர் அந்த ஏரி ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகப் பல்வேறு ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது. அதனால் அந்த ஊர் விவசாயிகள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து 2005ம் ஆண்டில் அனைத்து ஆக்ரமிப்பையும் அகற்றியபின்னர்,  ஒரு முறை பனமரத்துப்பட்டி ஏரி நிரம்பியதாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு கருவேலம் முட்கள் முளைத்து, ஏரி கரும்வேலம் காடாக மாறிவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. (நன்றி: இணையதளங்கள்)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...