Gurgaon சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியாவின் Gurgaon புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் சீரோ-மலங்கரா திருவழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கு, ஆயர் Thomas Anthonios Valiyavilayil அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 07, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.
2015ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி, Khadki புனித எப்ரேம் சீரோ-மலங்கரா திருவழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்ட இவரை, இச்சனிக்கிழமையன்று, Gurgaon சீரோ-மலங்கரா திருவழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கு ஆயராக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் Thomas Anthonios Valiyavilayil அவர்கள், 1955ம் ஆண்டில், திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் Adoor பிறந்தார். 1980ம் ஆண்டில் கிறிஸ்துவைப் பின்பற்றுதல் எனும் சபையில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் கீழைவழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்.
இவர், சீரோ-மலங்கரா திருவழிபாட்டுமுறை தலத்திருஅவையில் பல்வேறு முக்கிய பணிகளை தலைமையேற்று நிறைவேற்றியுள்ளார்.
மேலும், கேரளாவின் சீரோ-மலங்கரா திருவழிபாட்டுமுறை பேரவை, திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் உதவி ஆயராக, அருள்பணி Mathew Manakkarakavil அவர்களை நியமித்துள்ளது. இந்நியமனத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் செய்தி
மேலும், நம்பிக்கையாளர்களின் அன்னையாகிய மரியாவை அடிக்கடி நோக்குவோம், அவ்வன்னை மீதுள்ள பல்வேறு பக்திமுயற்சிகளில் ஒன்றான செபமாலையைச் செபிப்போம், அச்செபம், நம் நம்பிக்கை வாழ்வுப் பயணத்தை வாழவும், கிறிஸ்தவ சான்று வாழ்வு வாழவும் உதவும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் என்று, மே 07, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தி வழியாகக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment