Wednesday, 25 May 2022

வங்கதேசத்தில் புதிய புனிதருக்குத் திருப்பலி

 

வங்கதேசத்தில் புதிய புனிதருக்குத் திருப்பலி


புனிதர் சார்லஸ் தே புக்குவின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி நாங்களும் வாழ முயற்சிக்கிறோம்: அருள்சகோதரி Sabina Hasdak

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனிதர் சார்லஸ் தே புக்கு, அவரது அமைதியான செயல்களுக்காகக் கடவுளின் மாபெரும் அருளால் புனிதராக அறிவிக்கப்பட்டதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக அவரின் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Sabina Hasdak கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் "நீல உடையணிந்த சகோதரிகள்" என்று பிரபலமாக அறியப்படும் சார்லஸ் தே புக்குவின் மறைப்பணி சபைச் சகோதரிகள், சார்லஸ் தே புக்கு அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டதற்குச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி கூறியுள்ளனர்.  

மே 15 இஞ்ஞாயிறன்று, உரோம் நகரிலுள்ள புனித பேதுரு பெருங்கோவிலில் நடந்த புனிதர்பட்ட திருநிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது பேருடன் அருளாளர் சார்லஸ் தே புக்குவை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இதனை முன்னிட்டு  ஏறத்தாழ 100 உள்ளூர் கத்தோலிக்க விசுவாசிகளுடன் இணைந்து இச்சபை சகோதரிகள் இறைவனுக்கு நன்றி கூறியுள்ளனர்.

எங்கள் தொடர் இறைவேண்டலின் பலனை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறிய இச்சபையின் செய்தி தொடர்பாளர் அருள்சகோதரி Sabina Hasdak, எம் புனிதரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி நாங்களும் வாழ முயற்சிக்கிறோம் என்று யூகா செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

1978ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு வந்த இச்சபையைச் சேர்ந்த சகோதரிகள், ஏழைகளை மேம்படுத்த கைவினைப்பொருள்கள் செய்தல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விப்பணிகளாற்றி வருகின்றனர். டாக்கா மற்றும் குல்னா மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று துறவு இல்லங்களில் தற்போது ஒன்பது சகோதரிகள் உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே வங்கதேசத்தினர், மீதமுள்ளவர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...