வீராணம் ஏரி
வீராணம் ஏரி, முதலில் இராஜாதித்ய சோழனின் தந்தையான வீரநாரயணன் என்பவரின் பெயரால் வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட்டது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வீராணம் ஏரி (வீரநாராயணபுரம் ஏரி), தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயிலில் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து, இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது. இது கி. பி. 907 முதல் 953 வரை (1011 முதல் 1037 வரை என்றும் உரைப்பர்) சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இந்த ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழனின் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் பெயர்களுள் வீரநாரயணன் என்பதும் ஒன்று. இப்பெயரே வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட்டது, காலப்போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்ட, மனிதரால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரியாகும். காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது, மற்றும் ஏராளமான ஆறுகள் ஏரிக்குள் பாய்ந்து வருகின்றன. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது. ஆண்டின் பெரும்பகுதி இந்த ஏரி வறண்ட நிலையில் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் தொடக்க அத்தியாயம் வீரநாராயண ஏரியின் கரையில் அமைந்துள்ள ஏரியின் அம்சங்களை விரிவாக விவரிக்கிறது
சென்னைக்கு நீர் வழங்குவதற்காக வீராணம் திட்டம், 1967ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்களால் துவக்கிவைக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம். கருணாநிதியின் காலத்தில் நிறைவேற்றப்பட்டு, 2004ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் காலத்தில் முடிவடைந்தது.
No comments:
Post a Comment