மே 15, புனிதர்பட்டமளிப்பு திருப்பலி தமிழில் நேரடி ஒலி-ஒளிபரப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
மே 15, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், மறைசாட்சி லாசருஸ் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலி, வத்திக்கான் ஊடகத்தின் வழியாக, தமிழ் உட்பட ஐரோப்பிய மொழிகளில், நேரடியாக ஒளி-ஒலி பரப்பப்படும்.
புனிதர்பட்டமளிப்பும், விண்ணக அரசியே மனமகிழ்வாய் செபமும் இணைந்த இத்திருப்பலி தமிழில் 17790 கிலோ ஹெர்ட்ஸ், இந்தியாவுக்கென்று ஆங்கிலத்தில் 21650 கிலோ ஹெர்ட்ஸ் ஆகிய சிற்றலை அலைவரிசைகளிலும், வத்திக்கான் செய்திகளின் யுடியூப் வழியாக தமிழில் வெப் வானொலி அலைவரிசை 11லிலும் ஒலி-ஒளி பரப்பப்படும். .
வரும் ஞாயிறன்று வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்திலிருந்து, திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், அருளாளர்கள் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; இலாசருஸ் தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோருக்கு புனிதர் பட்டமளிப்பு, அதைத் தொடர்ந்து விண்ணக அரசியே மனமகிழ்வாய் செபம் நடைபெறும்.
மேலும், புனிதர்பட்டமளிப்பும், விண்ணக அரசியே மனமகிழ்வாய் செபமும் இணைந்த இத்திருப்பலி, தமிழில் https://www.youtube.com/watch?v=95NAgPgRZ6M என்ற முகவரியிலும் ஒளி பரப்பப்படும்.
No comments:
Post a Comment