An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Friday, 27 May 2022
கதைசொல்லல், ஒவ்வொருவரையும் இணைக்கும் அடிப்படைக் காரணி
கதைசொல்லல், ஒவ்வொருவரையும் இணைக்கும் அடிப்படைக் காரணி
கதை சொல்லும் கலை, பல நூற்றாண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்து, ஓர் எதிர்காலத்தை உருவாக்குகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புதிய புத்தகம் ஒன்றிற்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கதைசொல்லல் என்பது, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், அனைத்தையும் மற்றும் அனைவரையும் இணைக்கும் உடைக்க முடியாத ஒரு அழகிய பந்தம் என்று கூறியுள்ளார்.
மே 26, இவ்வியாழனன்று வத்திக்கான் பதிப்பகமும் சலானி பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள Andrea Monda என்பவர் எழுதியுள்ள The weaving of the world என்ற புதிய புத்தகத்திற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புத்தகத்தின் தொகுதிகள் அமைப்பு முறைபற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை, நூலின் தொடக்கத்திலேயே அருமையான செய்தி ஒன்று பகிரப்பட்டு அது மக்களின் கவனத்தை கவர்ந்திழுப்பதாகவும், சவால்களைச் சந்தித்து, தங்களைப் பங்களிப்பு செய்ய அவர்களைத் தூண்டி எழுப்புவதாகவும் கூறியுள்ளார்.
மறைபொருள், அமைதி, பரிவிரக்கம் ஆகிய மூன்று முக்கிய தொடர் கருப்பொருள்களை இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இதில் பரிவிரக்கம் என்பது காயமடைந்தவர்மேல் நல்ல சமாரியர் காட்டிய பரிவிரக்கத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, இப்புத்தகத்தைப் படிக்கும் அனைவரும் உரையாடலின் உண்மையான தத்துவத்தை உணரவும் அதனைத் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் நல்லதொரு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மொத்தம் 240 பக்கங்களைக் கொண்டுள்ள The weaving of the world என்று தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் கலைஞர்கள், இறையியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஏறத்தாழ 44 எழுத்தாளர்கள், மீட்பு என்ற ஒற்றைவழிப் பாதை என்ற கருப்பொருளில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
அமைதிக்காக செபித்து இணக்கமுடன் முன்னேறுங்கள் : திருத்தந்தை
அமைதிக்காக செபித்து இணக்கமுடன் முன்னேறுங்கள் : திருத்தந்தை
புனித மார்ட்டின், குளிரில் துன்புற்றுக்கொண்டிருந்த ஓர் ஏழையுடன் தனது ஆடையைப் பகிர்ந்துகொண்டதோடு, அவரைக் மனிதமாண்புடனும் அக்கறையுடனும் நடத்தினார் - திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
Katholikentag என்று அழைக்கப்படும் கத்தோலிக்க நாள்களின் 102வது பதிப்பில் பங்குபெறும் அதன் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளை மகிமைப்படுத்தவும், மகிழ்ச்சியின் நற்செய்திக்குச் சான்று பகரவும் அழைப்புவிடுத்துள்ளார்.
ஜெர்மனியின் Stuttgart நகரில் மே 25, இப்புதன்கிழமை மாலை தொடங்கி வருகிற ஞாயிறு வரை நடைபெறும் இக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று உக்ரைன் மக்கள் மற்றும் வன்முறையால் அச்சுறுத்தப்படும் அனைவருக்கும் நெருக்கமாக இருப்பதன் வழியாக, ஏழை மக்களின் துன்பங்களைக் களைவதில் இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும், அனைத்து மக்களுக்குமான அமைதியைக் கடவுளிடம் மன்றாடவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Rottenburg-Stuttgart மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித மார்ட்டின், நாம் பின்பற்றுவதற்கு ஓர் ஒளிமயமான எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர் குளிரில் துன்புற்றுக்கொண்டிருந்த ஓர் ஏழையுடன் தனது ஆடையைப் பகிர்ந்துகொண்டு, உதவியை மட்டும் வழங்காமல் அவரைக் மனிதமாண்புடனும் அக்கறையுடனும் நடத்தினார் என்று விளக்கியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பெயரைத் தங்கிய நாம் அனைவரும் புனித மார்ட்டினின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, நமது வாழ்வைத் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், நாம் எங்குத் தேவைப்படுகிறோம், யாருக்காகத் தேவைப்படுகிறோம் என்பதை உணர்ந்துகொள்வதில் விழிப்புடன் இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, புனித அன்னையாம் கன்னி மரியாவின் வாழ்வை எடுத்துக்காட்டி, கடவுளுடனான அவரின் தாழ்மையான அணுகுமுறையை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொண்டு, நமது சொந்த அணுகுமுறையை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி அமைப்பினர் சந்திப்பு
உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி அமைப்பினர் சந்திப்பு
ஒருமைப்பாட்டுணர்வு என்ற சொல்லுக்கு உயிரூட்டம் கொடுப்பதற்கு, ஒதுக்கப்பட்டோர், ஏழைகள், மற்றும், புலம்பெயர்ந்தோருடன் நெருக்கமாகவும், பரிவன்போடும் இருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்
உலகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு, பிறரன்பால் அல்ல, மாறாக, உடன்பிறந்த உணர்வுநிலையால் அணைத்துக்கொள்வதில் உங்கள் கைகளை அழுக்கடையச் செய்யுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில், ஓர் உலகளாவிய அமைப்பிடம் கேட்டுக்கொண்டார்.
மே 25, இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், பொது மறைக்கல்வியுரையை ஆற்றுவதற்குச் செல்வதற்குமுன், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி என்ற அமைப்பின் இருபது பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
இவ்வமைப்பினர், தங்களின் திறமைகளை, புலம்பெயர்ந்தோர் மற்றும், மிகவும் வாய்ப்பிழந்தோரோடு பகிர்ந்துகொண்டு ஆற்றும் பணிகளைத் தொடர்ந்து நடத்துமாறு ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வமைப்பினரின் உதவித் திட்டங்களில் பங்கெடுக்கும், கொலம்பியா மற்றும் எத்தியோப்பிய புலம்பெயர்ந்த மக்கள் கொடுத்தனுப்பிய நன்கொடைகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இவ்வமைப்பினர் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்திருந்தாலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றி வருவது குறித்து பாராட்டினார்.
இந்த உலகளாவிய அமைப்பை விளக்கும் சொல் ஒருமைப்பாட்டுணர்வு, இதுவே, திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் அடிப்படை கருத்தும் ஆகும், இச்சொல்லுக்கு உயிரூட்டம் கொடுப்பதற்கு, ஒதுக்கப்பட்டோர், ஏழைகள், மற்றும், புலம்பெயர்ந்தோருடன் நெருக்கமாகவும், பரிவன்போடும் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்
சிறுபான்மை வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு
சிறுபான்மை வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவில் அண்மைய மாதங்களில் அதிகரித்து வரும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகள் இப்போது தடுக்கப்படாவிட்டால், தேசிய அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அவை பெரும்தீங்கை விளைவித்துவிடும் என்று 103 ஆண்டுகள் பழமையான இந்திய கத்தோலிக்க அமைப்பு கூறியுள்ளது.
மாநில மேலவையில் வாக்கெடுப்பு நடத்தத் தவறிய நிலையில் மாநில ஆளுநரால் கையெழுத்திடப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு கர்நாடக மாநிலம் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதற்குப் பதிலளிக்கும் விதமாக மே 23, இத்திங்களன்று இவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
அவ்வாறே மற்ற ஒன்பது இந்திய மாநிலங்களும் மத மாற்றத்தைக் குற்றமாகக் கருதும் இதேபோன்ற சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் இவ்வமைப்பு மேலும் கவலை தெரிவித்துள்ளது.
அமைதி மற்றும் நல்லுறவை வலுப்படுத்த அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் இவ்வமைப்பின் தேசியத் தலைவர் Lancy D'Cunha.
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அரியாணா ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள், அனைத்து நிலைகளிலும் சிறுபான்மை சமூகங்கள், அவர்களின் மதத்தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைப் பயமுறுத்துவதற்கு சம்மந்தமே இல்லாத பலருக்கு இது அதிகாரம் கொடுத்துள்ளதாகவும் அவ்வமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
AICU என்பது, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுநிலையினரைக் கொண்ட ஒரு அமைப்பாகும். திருஅவையின் சமூகப் போதனைகளை அறிவிப்பதில் பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு மக்களைத் தூண்டி எழுப்புகிறது இவ்வமைப்பு.
Wednesday, 25 May 2022
Bishop Martinelli: Human fraternity a prophetic act for peace
Bishop Martinelli: Human fraternity a prophetic act for peace
A few weeks before the start of his assignment as Apostolic Vicar of Southern Arabia, Bishop Paolo Martinelli takes stock of his mission. He looks forward to working in a multi-cultural ecclesial reality and reflects on how the Document on Human Fraternity signed in Abu Dhabi shows the way for living a life of faith in harmony with all.
By Alessandro De Carolis
Bishop Paolo Martinelli, OFM Cap., is the new Apostolic Vicar of Southern Arabia. Earlier this month he left his ministry as episcopal vicar in the Archdiocese of Milan to gradually immerse himself in the new reality of his pastoral ministry. The universal importance of human fraternity, as described in the Document on Human Fraternity for World Peace and Living Together, offers an important reference point for his work there. He spoke to Vatican News about his new role and the context where he now serves.
What has been your approach to that portion of Church and interreligious relations that the Pope has entrusted to you?
I have tried to become more aware of what this assignment means. And now there have been some opportunities to hear from my predecessor, Bishop Paul Hinder, and the other members of the Bishop's House in Abu Dhabi as well. We have tried to gain insights into the reality of this Apostolic Vicariate. I understand that it is a very complex, a very diverse reality, however, it also seems to be very promising, very beautiful and very significant for the Church today. A Church composed totally of faithful migrants who are there to work, and we, as a Church reality, have to serve them, their faith, their being there, their inhabiting that territory: not an easy reality, but which gives them the possibility to work. On the other hand, there is the daily encounter with the reality of Islam.
Not only is it a "Church of the Gentiles," because it is composed of faithful who come from so many countries, from different cultures, even the priests themselves, are from many different countries. The other reality to consider is that this is the place where Pope Francis, three years ago, signed the Abu Dhabi Document together with the Grand Imam of Al-Azhar. So I think we have the task of cherishing the memory of this prophetic gesture, the importance of which is certainly even stronger now than it was three years ago.
You have just taken on your new responsibility, has the Document on Human Fraternity in any way already had an influence on your ministry?
I will travel at the end of June to Abi Dhabi, where there will be a Mass to begin my ministry. Then there will also be a meeting with the civil authorities, so there will definitely be an opportunity to have more direct contact with them. It seems to me that the Christian community is already trying find ways the Document on Human Fraternity event can be an important criterion for living out their faith and their relationships within that social context. On my part, I find this a particularly significant theme today, not only for that land, since it seems to me that this encounter that took place in that very land has something to say to the whole world at this time.
Europe is currently the focus of a war that has upset all the geopolitical balances of the continent. What is the perception of this situation in the area where you have been called to serve?
It seems to me that the history of the countries (here), the good relations that are being established in recent years, show the importance of the message that the Pope is giving both with respect to the war in the face of these dramatic and upsetting events (in Europe), but above all in the promotion of relationships of fraternity. This is a central theme, we must keep it in mind, and it is what we need in order to be able to address and overcome an international crisis of such devastating proportions. If we really don't return to a spirit of fraternity, if we do not spread this message in our cultures, I think we really are heading for an increasingly complex situation that will be very difficult to overcome.
Would you say that the Human Fraternity message could be "exported" from the land where it was established, in a sense, sending a message of fraternity and peace to other lands where it is very much needed?
Exactly. It is interesting that it came from this context, so in the relationship between Christianity and Islam, it affirms something that is important for every man and woman of our time.
Your ministry as Apostolic Vicar of Southern Arabia is beginning during these weeks. Do you have any particular points that you feel you need to develop in your mission as part of your short or mid-term goals?
In studying some of the activities that are carried out by the Apostolic Vicariate, certainly there is this parish network that allows us to respond to a great need that our faithful have. And this is certainly something that needs to be strengthened and carried on, where the context allows, peacefully. Certainly my thoughts and heart, from the beginning, have gone to Yemen, which is part of the Vicariate and which at this moment, and for years, has been experiencing a very serious conflict. I think of the Sisters of Mother Teresa who suffered the loss of four of their sisters there because they did not want to leave that place, despite the threats, because they felt the duty of faith and of their vocation to care for people with disabilities. Then, there is another thing that strikes me, which I think is interesting to develop: I found the presence of many schools promoted by the Vicariate in collaboration with some religious institutes. This seems to be something traditional in the context of the Middle East: schooling environments as a point of intercultural and also interreligious encounter, since many of those who attend these schools are Muslims. This seems to me something that deserves to be developed: the place where one learns to weave positive relationships with people who represent cultural and religious diversity, so we can build a good life for all.
சமத்துவமற்றநிலைகளின் சவால்களை எதிர்கொள்ள Laudato si'
சமத்துவமற்றநிலைகளின் சவால்களை எதிர்கொள்ள Laudato si'
தாவோஸ் நகரில், மே இஞ்ஞாயிறு முதல் 26, வியாழன் வரை உலக பொருளாதார அமைப்பு, மாநாடு ஒன்றை நடத்தி வருகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பு, மாநாடு ஒன்றைத் துவக்கி நடத்திவரும்வேளை, இவ்வுலகத்தின் சமத்துவமற்றநிலைகள் முன்வைக்கும் சவால்களை, Laudato si' திருமடலின் உதவியோடு எதிர்கொள்ள முடியும் என்று, உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் (UISG) பொதுச் செயலர் அருள்சகோதரி Patricia Murray கூறியுள்ளார்.
மே 22, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள ஐந்து நாள் மாநாட்டில், கோவிட்-19 பெருந்தொற்று, மற்றும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் ஆகிய இரண்டும் உருவாக்கியுள்ள நெருக்கடிகளுக்குப் பதிலிறுப்பது குறித்து, கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
WEF எனப்படும் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெற்றுவரும் தாவோஸ் நகரில், உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதியகம், உலகின் கத்தோலிக்க துறவுக் குழுமங்களோடு இணைந்து, உலகில் நிலவும் சமத்துவமற்றநிலைகளைக் களைவது குறித்த கலந்துரையாடல்களை நடத்தி, தங்களின் ஆலோசனைகளையும் அம்மாநாட்டிற்கு வழங்கி வருகிறது. இந்தக் கலந்துரையாடல்களில் பங்குபெறும் அருள்சகோதரி Patricia Murray அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், தொழிலதிபர்களோடு துறவு சபைகள் கலந்துரையாடல் நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
இந்த உலக பொருளாதார மாநாட்டில் இடம்பெறும் கருத்துப்பரிமாற்றங்கள், உரைகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை தான் மிகவும் வரவேற்பதாகவும், தாங்களும் இதே நகரில் மற்றொரு கலந்துரையாடல்களை மேற்கொள்வதால், தங்களின் கருத்துக்களை அம்மாநாட்டினருக்கு உடனுக்குடன் எடுத்துச்சொல்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும், அருள்சகோதரி Murray அவர்கள் கூறியுள்ளார்.
சமுதாயங்களில் மிகவும் உதவி தேவைப்படுவோர், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், கடும் ஏழ்மையில் வாழ்வோர், நலவாழ்வில் அல்லது கல்வி வசதி பற்றாக்குறைவை எதிர்கொள்வோர் போன்றோருக்கு, எண்ணற்ற அருள்சகோதரிகள் உலகெங்கும் பணியாற்றி வருகின்றனர், இவர்கள் சார்பாக எங்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க இந்த உலக பொருளாதார மாநாடு உதவியாக உள்ளது என்றும், அருள்சகோதரி Murray அவர்கள் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தற்போது உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் போன்று, WEF அமைப்பு, தன் ஐம்பது வருட வரலாற்றில் சந்தித்ததில்லை என்று, அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் புதிய புனிதருக்குத் திருப்பலி
வங்கதேசத்தில் புதிய புனிதருக்குத் திருப்பலி
புனிதர் சார்லஸ் தே புக்குவின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி நாங்களும் வாழ முயற்சிக்கிறோம்: அருள்சகோதரி Sabina Hasdak
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனிதர் சார்லஸ் தே புக்கு, அவரது அமைதியான செயல்களுக்காகக் கடவுளின் மாபெரும் அருளால் புனிதராக அறிவிக்கப்பட்டதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக அவரின் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Sabina Hasdak கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் "நீல உடையணிந்த சகோதரிகள்" என்று பிரபலமாக அறியப்படும் சார்லஸ் தே புக்குவின் மறைப்பணி சபைச் சகோதரிகள், சார்லஸ் தே புக்கு அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டதற்குச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி கூறியுள்ளனர்.
மே 15 இஞ்ஞாயிறன்று, உரோம் நகரிலுள்ள புனித பேதுரு பெருங்கோவிலில் நடந்த புனிதர்பட்ட திருநிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது பேருடன் அருளாளர் சார்லஸ் தே புக்குவை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இதனை முன்னிட்டு ஏறத்தாழ 100 உள்ளூர் கத்தோலிக்க விசுவாசிகளுடன் இணைந்து இச்சபை சகோதரிகள் இறைவனுக்கு நன்றி கூறியுள்ளனர்.
எங்கள் தொடர் இறைவேண்டலின் பலனை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறிய இச்சபையின் செய்தி தொடர்பாளர் அருள்சகோதரி Sabina Hasdak, எம் புனிதரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி நாங்களும் வாழ முயற்சிக்கிறோம் என்று யூகா செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
1978ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு வந்த இச்சபையைச் சேர்ந்த சகோதரிகள், ஏழைகளை மேம்படுத்த கைவினைப்பொருள்கள் செய்தல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விப்பணிகளாற்றி வருகின்றனர். டாக்கா மற்றும் குல்னா மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று துறவு இல்லங்களில் தற்போது ஒன்பது சகோதரிகள் உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே வங்கதேசத்தினர், மீதமுள்ளவர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
Tuesday, 24 May 2022
நல்ல சமாரியரைப் போன்று பிறரைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறீர்கள்
நல்ல சமாரியரைப் போன்று பிறரைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறீர்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உடன்பிறந்த உணர்வு நிலையில் ஒருவரின் உயிரை மீட்பதும், அதனைப் பாதுகாப்பதும், அவ்வுயிருக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பதும், இறுதிவரை அதனைக் கவனித்துக்கொள்வதுமே உண்மையான பாதுகாப்பு என்பதை உணர்ந்து பணியாற்றிட வேண்டுமென ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 23, இத்திங்களன்று, குடிமக்களின் பாதுகாப்புக்கான தேசிய சேவையின் தன்னார்வலர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத் தனிமையிலிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, சொந்த வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
முதலாவதாக, சமூகத் தனிமையிலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில், போர்களாலும் நோய்களாலும் மக்கள் பெரும்துயர்களை அனுபவித்து வருகின்றனர், நாம் எல்லாவற்றிலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, தற்போதைய உக்ரைன் நிலையை எடுத்துக்காட்டி, அனைத்து மக்களுக்கும் அமைதி நிறைந்த வாழ்வைக் கொடுக்க வேண்டியது அவர்களின் தலையாயக் கடமை என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவதாக, இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில், நம் காலத்தின் காலநிலை மாற்றங்கள், தீவிர வானிலை நிகழ்வுகளை பன்மடங்கு அதிகரிக்கச் செய்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுபோன்ற துயரங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் பணியில் அவர்களின் வாழ்க்கை பெரும் சான்றாகி வருகின்றது என்றும் தெரிவித்தார்.
மூன்றாவதாக, சொந்த வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில், ஒவ்வொரு மனிதருக்கும் தனது நாட்டையும் சொந்த நிலத்தையும் பாதுகாப்பதில் சிறப்பான பொறுப்பு உண்டு. உலக நன்மைக்காக ஒவ்வொருவரும் தனது சொந்த நிலத்தைப் பாதுகாத்து நேசிக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, இப்படிப்பட்ட நிலையில் பொதுச் சொத்துக்கள் அழிந்துபோகாமலும் அல்லது சிலருக்கு மட்டுமே பலனளிக்காமலும் பாதுகாப்பதில் மனச்சான்றுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் எடுத்துக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Friday, 20 May 2022
உடன்பிறந்த உணர்வுகொண்ட ஓர் உலகில் நம்பிக்கை வையுங்கள்
உடன்பிறந்த உணர்வுகொண்ட ஓர் உலகில் நம்பிக்கை வையுங்கள்
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், புருண்டி, கத்தார் ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதர்களிடமிருந்து, பணி நியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்
மனித உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதி ஆகியவற்றால் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்ப முடியும் என்பதில் நம்பிக்கை இழக்கவேண்டாம் என்று, ஆசிய நாடுகளின் புதிய திருப்பீடத் தூதர்களை இவ்வியாழனன்று ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்திற்கான பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், புருண்டி, கத்தார் ஆகிய நாடுகளின் புதிய தூதர்களிடமிருந்து, மே 19, இவ்வியாழனன்று பணி நியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, வரலாற்றில் தனித்துவமிக்க சவால்நிறைந்த நேரத்தில், இப்புதிய தூதர்கள் தங்களின் பணிகளைத் தொடங்குகின்றனர் என்று கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்குப்பின்னர் இந்த உலகம் வழக்கமான நிலைக்குத் திரும்பியிருந்தாலும், கிழக்கு ஐரோப்பாவில் இடம்பெற்றுவரும் போரின் இருளான மேகம், உலகம் முழுவதையும், நேரடியாக அல்லது மறைமுகமான வழிகளில் சூழ்ந்துள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.
மனித சமுதாயத்தில் சிறப்பானதைக் கொணர..
ஆயினும், பெருந்தொற்றுக்கு நாம் பதிலளித்ததுபோன்று இந்தப் பெருந்துன்பம்கூட மனித சமுதாயத்தில் சிறப்பானதைக் கொணரக்கூடும் எனவும், நவீன தொழில்நுட்பம், போரின் கொடூரங்களை நமக்குக் காட்டினாலும், அது, தோழமை மற்றும், உடன்பிறந்த உணர்வை நம்மில் தூண்டியுள்ளது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
போரினால் புலம்பெயர்ந்துள்ளோரை வரவேற்பது மற்றும், அவர்களுக்கு கைம்மாறு கருதாமல் மனிதாபிமான உதவிகளை ஆற்றுவது ஆகிய நடவடிக்கைகள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் இடம்பெற்றுவரும் எண்ணற்ற மற்ற போர்கள், ஊடகத்தில் சிறிதளவு அல்லது எதுவுமே கவனம் செலுத்தப்படாமல் உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.
மனிதாபிமான ஆதரவும், உடன்பிறந்த உணர்வும், புவியியல் ரீதிப்படி அல்லது, சுய இலாபத்தின் அடிப்படையில் இடம்பெறக்கூடாது என்றும், இந்நற்செயல்கள், போர்கள் இடம்பெறும் பகுதிகளில் மட்டுமல்ல, காலநிலை மாற்றம், வறுமை, பசி போன்ற மனிதக் குடும்பத்தைத் தாக்கியுள்ள அநீதச் சூழல்களிலும் இடம்பெறவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொணாடார்.
உலக சமுதாயத்தின் பங்கு
இத்தகைய பிரச்சனைகளுக்கு உலகளாவிய சமுதாயத்தின் பங்கை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் அரசுகளின் தூதர்கள் ஆற்றவேண்டிய பங்கையும் எடுத்துரைத்தார்.
Wednesday, 18 May 2022
புனித தேவசகாயம் ஆசியத் திருஅவைக்கு மிகப்பெரும் கொடை
புனித தேவசகாயம் ஆசியத் திருஅவைக்கு மிகப்பெரும் கொடை
புனிதத்துவம் என்பது, துறவறத்தாருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியது என்பதை, இல்லற விசுவாசியாகிய தேவசகாயம் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார் - கர்தினால் கிரேசியஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
முதல் இந்திய இல்லறப் புனிதரான தேவசகாயம் அவர்கள், ஆசியத் திருஅவைக்கு மிகப்பெரும் கொடை என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளின் பத்து புதிய புனிதர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கும் மறைசாட்சி புனித தேவசகாயம் அவர்கள், தமிழ்நாட்டில் உயர்குல இந்துக் குடும்பத்தில் பிறந்து இராணுவத்துறையில் பணியாற்றி, திருவிதாங்கூர் அரண்மனையில் முக்கிய பதவி வகித்தவர் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.
நீலகண்டன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், நற்செய்தியை தழுவிக்கொண்டபின் லாசர் என்ற பெயரை ஏற்றார், அதற்குப்பின் அனைத்து மக்கள் மத்தியிலும் இயேசுவின் பெயரால் சமத்துவத்தைப் போதித்தார், இதுவே அவர் கைதுசெய்யப்பட்டு மறைசாட்சி மரணத்தை ஏற்பதற்குக் காரணமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இன்றைய இந்தியாவுக்கு இப்புனிதரும் அவர் வழங்கும் செய்தியும் காலத்திற்கேற்றவையாக உள்ளன என்று கூறியுள்ளார்.
இவரது கிறிஸ்தவ நம்பிக்கை ஒப்பிடப்படமுடியாதது, மற்றும், கிறிஸ்து மீது அவர் கொண்டிருந்த அன்பு மாறாதது என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.
புனிதத்துவம் என்பது, துறவறத்தாருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியது என்பதை, இல்லற விசுவாசியாகிய தேவசகாயம் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார், இன்று திருஅவையில் பொதுநிலையினரின் அழைப்பு பற்றி அதிகமதிகமாகப் பேசுகிறோம், இந்த இந்தியப் பொதுநிலையினர் மற்றும் குடும்ப மனிதராகிய தேவசகாயம், நற்செய்தியின் விழுமியங்களுக்கு உண்மையான சாட்சியாக இருக்கிறார் என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)
Monday, 16 May 2022
மே 15 - புனிதர்பட்ட திருப்பலி விளக்கம்
மே 15 - புனிதர்பட்ட திருப்பலி விளக்கம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உரோம் நகரின் புனித பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிரம்பியிருந்தது, இந்த மே மாதம் 15ம் தேதி ஞாயிறு காலையில். 10 மணி திருப்பலிக்கு, காலை 7 மணியிலிருந்தே வளாகத்திற்குள் நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த மக்களைக் காணமுடிந்தது. அவ்வளவு பெரிய வளாகம் மட்டுமல்ல, அதற்கு முன்னுள்ள வியா தெல்லா கொன்சிலியாட்சியோனே என்ற சாலையிலும் மக்கள் குழுமியிருந்தனர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப்பின், அதாவது, 2019ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதிக்குப்பின் வத்திக்கானில் இடம்பெறும் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில், இந்திய மண்ணின், அதுவும் தமிழகத்தின் முதல் பொதுநிலை மறைசாட்சி தேவசகாயம் உட்பட 10 பேரை புனிதராக அறிவித்தார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். கடைசியாக இடம்பெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கும், அதாவது 5 பேர் திருஅவையில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட 2019ம் ஆண்டு விழாவுக்கும், தற்போது 10 பேர் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட விழாவுக்கும் இடையே நிறைய தொடர்புகள் உள்ளன. அப்போதும் இந்தியர் ஒருவர், அதாவது கேரளா மாநிலத்தின் அருள்சகோதரி மரியம் தெரேசியா சிரமல் மங்கிடியான் (Mariam Thresia Chiramel Mankidiyan) என்பவர் புனிதராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதே நாளில் புனிதராக அறிவிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் கர்தினால் ஜான் ஹென்றி நியுமென் அவர்களும் நம் தேவசகாயம் அவர்களைப்போல் கத்தோலிக்க மதத்தை தழுவியவர். தேவசகாயம் அவர்கள் தன் 33வது வயதிலிலும், கர்தினால் நியூமென் அவர்கள் அவரின் 44ம் வயதிலும் கத்தோலிக்க மதத்தை தழுவியவர்கள். இவ்வாறு சில ஒற்றுமைகளை எடுத்துரைக்கலாம். கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போடப்பட்டிருந்த இந்த 10 அருளாளர்களின் புனிதர் பட்ட அறிவிப்பில், இந்தியாவிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் உட்பட எண்ணற்றோர் கலந்துகொண்டனர்.
மே 15, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் கூட்டுத்திருப்பலியில், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய பாஸ்கா கால 5ம் ஞாயிறு திருப்பலியில், திருத்தந்தையோடு இணைந்து, இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், கேரளாவின் சீரோ மலபார் வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கார வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், தமிழக ஆயர் பேரவைத் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி, பாண்டிச்சரி கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், கோட்டாறு ஆயர் நசரேன் சூசை, கோயம்புத்தூர் ஆயர் தாமஸ் அக்குவினாஸ், தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி, பாளையங்கோட்டை ஆயர் அந்தோனி சவரிமுத்து, சேலம் ஆயர் அருள்செல்வம் இராயப்பன், வாரனாசி ஆயர் யூஜின் ஜோசப் உட்பட இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இந்தியத் திருஅவைத் தலைவர்கள் உட்பட பல்வேறு நாடுகளின் ஐம்பது கர்தினால்கள், 150 ஆயர்கள், 150 அருள்பணியாளர்கள் இக்கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.
அருளாளர்கள் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; லாசருஸ் தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோரைப் புனிதர்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த திருப்பலியிலும், அது தொடர்புடைய ஏனைய கொண்டாட்டங்களிலும், தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திருமிகு பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் உட்பட இந்தியர்களும் கலந்துகொண்டனர்.
முதலில், திருப்பலியில் 10 அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பதற்கான பரிந்துரை, கர்தினால் மர்ச்செல்லோ செமராரோ அவர்களால் திருத்தந்தையிடம் முன்வைக்கப்பட்டது. புதிய புனிதர்களின் வாழ்க்கை குறிப்பும் அனைவருக்கும் வாசிக்கப்பட்டபின் புனிதர்களின் பரிந்துரையைக் கேட்கும் மன்றாட்டும் இடம்பெற்றது. அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 10 அருளாளர்களையும் புனிதர்களாக அறிவித்தார். இதன்பின், தேவசகாயம் அவர்களின் புனிதப்பொருள்களுக்கு இடும் தூபப்பொருட்களை DMI எனப்படும் அமல அன்னை புதல்வியர் என்ற இந்திய துறவுசபையின் தலைவர் அருள்சகோதரி லலிதா அவர்கள் எடுத்துச்செனறார். ஆண்டவரின் அன்பு குறித்து தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலியில் செபிக்கப்பட்ட நம்பிக்கையாளர் மன்றாட்டுகளில், முதல் மன்றாட்டு நற்செய்திக்கு ஆற்றும் மிகப்பெரும் மறைப்பணியில் திருத்தந்தைக்கு ஆண்டவர் சக்தியை அருளுமாறு பிரெஞ்சு மொழியில் இடம்பெற்றது. இரண்டவது மன்றாட்டு தமிழில், லீமா என்பவரின் குரலில், அரசுகளின் தலைவர்கள், மற்றும் குடிமக்களுக்காகச் செபிக்கப்பட்டது. மூன்றாவது மன்றாட்டு இஸ்பானிய மொழியில், பாவிகள், வன்முறை மற்றும் காழ்ப்புணர்வை விதைப்பவர்களின் மனமாற்றத்திற்காக, ஒப்புரவிற்காக இறைவேண்டல் செய்வதாக இருந்தது. நான்காவது மன்றாட்டு ஹாலந்து மொழியில், புதிய புனிதர்களின் சான்று வாழ்விலிருந்து துறவியர் உள்தூண்டுதல் பெறும்படியாக ஆண்டவரிடம் மன்றாடுவதாக இருந்தது. ஐந்தாவது மன்றாட்டோ, இத்தாலிய மொழியில் பெற்றோருக்காகச் செபிப்பதாக இருந்தது.
காணிக்கைப்பொருள்களை MMI எனப்படும் அமல அன்னை மறைப்பணியாளர் என்ற இந்திய துறவுசபையின் தலைவர் அருள்பணி வில்லியம் அவர்களும், ஏனையவர்களோடு பவனியில் கலந்துகொண்டார். திருப்பலியின் இறுதியில் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களோடு இணைந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தையும் செபித்தார் திருத்தந்தை. அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாலை திருவழிபாடு
மேலும், மே 14, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 3.15 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை இரவு 6.45 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தலைமையேற்று மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் நினைவு மாலை திருவழிபாட்டை நிறைவேற்றினார். இதில் இந்தியத் தலத்திருஅவை பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், ஏராளமான பொது நிலையினர் பங்குபெற்றனர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நடைபெற்ற இத்திருவழிபாட்டில், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் இடம்பெற்றன. அதன்பின் வத்திக்கானுக்கு அருகில், டைபர் ஆற்றின் மறுகரையில் அமைந்திருக்கும் புனித திருமுழுக்கு யோவான் பசிலிக்காப் பேராலயத்தில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
புனித தேவசகாயம் உட்பட புதிய 10 புனிதர்களின் வரலாறு
புனித தேவசகாயம் உட்பட புதிய 10 புனிதர்களின் வரலாறு
மேரி தெரேசா - வத்திக்கான்
அருளாளர் லாசருஸ் எனப்படும் தேவசகாயம் அவர்கள், தென் இந்தியாவின் திருவிதாங்கூர் மன்னராட்சியின்போது 1712ம் ஆண்டில் பிறந்தவர். அவரது இந்துமதப் பெற்றோர்களாகிய வாசுதேவன் நம்பூதிரி, தேவிகா அம்மா தம்பதியர், அவருக்கு நீலகண்டன் என்ற பெயரைச் சூட்டினர். இவர் அரண்மனையில் கருவூலத்திற்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தனது 33வது வயதில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய இவர், திருமுழுக்கில் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். இப்பெயர் லாசர் என்ற விவிலியப் பெயரோடு ஒத்துச்செல்வதாகும். இவரது மதமாற்றம் அரசத் துரோகம் மற்றும், அரசின் நிலையான தன்மைக்கு ஆபத்து எனக் கருதப்பட்டது. தேவசகாயம் அவர்கள் தவறாமல் அருளடையாளங்களைப் பெற்றார், பிற்படுத்தப்பட்ட சாதியினரோடு உணவருந்தினார், மிகவும் தாழ்மைப் பண்பைக் கடைப்பிடித்தார். நற்செய்தியை அறிவித்தார். மூடநம்பிக்கைகள், மற்றும், அநீதிக்கு எதிராகக் குரல்கொடுத்தார். இவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 1749ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி அரசர் இவரைக் கைதுசெய்ய ஆணையிட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். கரங்கள் கட்டப்பட்டு எருமை மீது பின்புறமாக அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பொதுவில் இரக்கமின்றி முள்சாட்டையால் அடிக்கப்பட்டார். அவரது காயங்களில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டது. எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடும் மனமகிழ்வோடும் ஏற்றார் மறைசாட்சி தேவசகாயம். பல்வேறு கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், உட்காரவோ படுக்கவோ முடியாதபடி, ஏழு மாதங்கள் ஒரு மரத்தில் சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டார். 1752ம் ஆண்டு சனவரி 14ம் தேதியன்று நள்ளிரவில் படைவீரர்கள் அவரை எழுப்பி காற்றாடி மலைக்குக் கூட்டிச்சென்றனர். அவர் படைவீரர்கள் முன்னிலையில் தனது இறுதி செபத்தைச் சொன்னார். ஐந்து துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் மறைசாட்சி தேவசகாயம். இயேசு மரி என்ற இனிய பெயர்களை உச்சரித்து உயிர்துறந்தார். கொலைகாரர்கள், இவரது உடலை அடக்கம் செய்யாமல், காட்டில் வனவிலங்குகளுக்கு உணவாகப் போட்டார்கள். தேவசகாயம் அவர்களின் வீர மரணம் பற்றிய செய்தி மூன்று நாள்களுக்குப்பின் அப்பகுதியில் பரவத் தொடங்கியது. ஐந்து நாள்களுக்குப்பின் மக்கள் அவரது எஞ்சிய உடலைக் கண்டுபிடித்து, அவற்றை மிகப் புகழ்பெற்ற கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தின் பலிபீடத்திற்கு முன்பாக நல்லடக்கம் செய்தனர். அன்றிலிருந்து, தேவசகாயம் அவர்கள், திருமணமான முதல் பொதுநிலையினர் புனிதராகவும். மறைசாட்சியாகவும் கருதப்பட்டார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அவரை அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா அவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் தக்காவோ வதைமுகாமில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர். 1881ம் ஆண்டில் நெதர்லாந்தில் பிறந்த இவர், கார்மேல் சபைத் துறவியும் அருள்பணியாளருமாவார். இவர், உரோம் பாப்பிறை கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில், முனைவர் பட்டம் பெற்றவர், மற்றும், சமூகவியல் படிப்பையும் முடித்தவர். மெய்யியல் மற்றும், தியானயோகிகள் ஆழ்நிலை வரலாறு கல்வியைக் கற்றுக்கொடுத்தவர். நெதர்லாந்து ஆயர்கள், இவரை கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பேச்சாளராக நியமித்து, நாத்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து விளம்பரங்கள் செய்யுமாறு பணிக்கப்பட்டார். இதன் விளைவாக, நாத்சி கொள்கையாளர்களால் கைதுசெய்யப்பட்டு வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் 1942ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நஞ்சு ஊசி ஏற்றி கொலைசெய்யப்பட்டார். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், டைட்டஸ் பிரான்ட்ஸ்மா அவர்களை, 1985ம் ஆண்டில் அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் சீசர் தெ புஸ் அவர்கள், 1544ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் புரோவென்சாவில் பிறந்தவர். இயேசு சபையினரின் பள்ளியில் பயின்ற இவர் திருத்தூதுப் பணி மற்றும் மறைக்கல்வியில் தணியாத் தாகம் கொண்டு, 1592ம் ஆண்டில் கிறிஸ்தவக் கோட்பாட்டுத் தந்தையர் சபையைத் தோற்றுவித்தார். இறைவேண்டல், படிப்பு இவற்றில் நாள்களைச் செலவழித்து புனித வாழ்வு வாழ்ந்தார். 1607ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நாள் காலையில் அவிஞ்ஞோனில் இறைபதம் சேர்ந்தார் இவர். 1975ம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், சீசர் தெ புஸ் அவர்களை அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ அவர்கள், 1827ம் ஆண்டில் இத்தாலியின் பெர்கமோவில் பிறந்தவர். 1850ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இளையோரை வழிநடத்துவதிலும் அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் காட்டியவர். வணக்கத்துக்குரிய மரிய தெரேசா கபிரியேலியுடன் சேர்ந்து ஏழைகளின் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார். இச்சபையினர், குடும்பங்கள் இல்லாத, மிக வறுமையிலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கும், துன்பத்தில் உழலும் குடும்பங்களுக்கும் பெற்றோரை இழந்த சிறாருக்கும் ஆதரவளித்து வருகின்றனர். இவர் 1886ம் ஆண்டில் தனது 58வது வயதில் இறைபதம் சேர்ந்தார்., 1963ம் ஆண்டில் திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள், லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ அவர்களை அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ அவர்கள், இறையழைத்தல்களை ஊக்குவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதனால், உலகளாவிய புனிதத்துவத்திற்காக ஓர் அருள்பணியாளர் சபை, ஒரு பெண் துறவு சபை மற்றும், பொதுநிலையினர் நிறுவனம் ஆகியவற்றைத் தோற்றுவித்தார். 1891ம் ஆண்டில் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரின் பியநூராவில் பிறந்த இவர் 1913ம் ஆண்டில் அருள்பணியாளரானார். திருநற்கருணை மீது மிகுந்த பக்தியை ஊக்குவித்த இவர், 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி இறைவனடி சேர்ந்தார். 2011ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ அவர்களை அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் சார்ல்ஸ் து புக்கு அவர்கள், 1858ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். பிரெஞ்சு இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், புவியியல் ஆய்வாளர் மற்றும், நாடுகாண் பயணியாக இருந்தார் பின்னர் இவருக்கு ஏற்பட்ட ஆழமான ஆன்மீக அனுபவம் மற்றும், மனமாற்றத்தால் பக்குவப்பட்டு, தன் வாழ்வை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். 1901ம் ஆண்டில் அருள்பணியாளரான இவர், இயேசுவைப் பின்பற்றி மௌனத்திலும், மறைந்த வாழ்விலும் ஆழ்நிலைத் தியானத் துறவியாக வாழத் துணிந்தார். இவரது பணியும் எழுத்துக்களும் இயேசுவின் சிறிய சகோதரர்கள் சபையை ஆரம்பிக்க வைத்தன. ஆப்ரிக்காவின் அல்ஜீரியா நாட்டின் சஹாராப் பகுதியின் திருத்தூது அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய இவர், சிறிய சகோதரர் என்று அழைக்கப்பட்டார். சஹாரா பாலைவனத்தின் மையப் பகுதியில் ஏழைகளின் ஏழையாக, செபம், தியானம், ஆராதனை ஆகியவற்றில் வாழ்வை செலவழித்த இவர், 1916ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று மாலையில் கொள்ளைக் கூட்டத்தினரால் கொலைசெய்யப்பட்டார். 2005ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சார்ல்ஸ் து புக்கு அவர்களை அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் மரிய ரிவியெர் அவர்கள், பிரான்ஸ் நாட்டில் 1768ம் ஆண்டில் பிறந்தவர். பிரெஞ்சு புரட்சி நடந்த காலக்கட்டத்தில், கல்வி கற்பிக்கவேண்டுமென்ற ஆவலில், காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையை உருவாக்கினார். மக்களின் சமய நம்பிக்கை வாழ்வு செழிப்பதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த இவர், 1838ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இறைபதம் சேர்ந்தார். 1982ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரிய ரிவியெர் அவர்களை அருளாளராக அறிவித்தார்.
அருளாளர் மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ அவர்கள், 1844ம் ஆண்டில் இத்தாலியின் பியெமொந்தேயில் பிறந்தவர். தூரின் நகரில் ஏழைகள், நோயாளிகளுக்குப் பணியாற்ற அர்ப்பணித்திருந்த இவர், மறைக்கல்வியையும் போதித்து வந்தார். இப்பணியினால் உள்தூண்டுதல் பெற்று, லொவானோவின் கப்புச்சின் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். உருகுவாய் நாட்டின் மொந்தேவிதேயோவில் தன் சபையின் குழுமத்தைப் பார்வையிடச் சென்றபோது, 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி காலமானார். 1993ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ அவர்களை அருளாளராக அறிவித்தார்
அருளாளர் இயேசுவின் மரிய சாந்தோகனாலே அவர்கள், லூர்தின் அமலமரி கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையை நிறுவியவர். இவர், இத்தாலியின் பலேர்மோவில் 1852ம் ஆண்டில் பிறந்தார். மிகவும் வறிய நிலையில் இருந்தவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த இவர், இளையோருக்கு கல்வி வழங்குவதிலும் ஆர்வம் காட்டினார். நாள் முழுவதும் கடுமையாக வேலைசெய்தபின்னர், 1923ம் ஆண்டு சனவரி 27ம் தேதி இவர் இறைபதம் சேர்ந்தார். 2016ம் ஆண்டில் இவர் அருளாளர் பட்டியலில் இணைக்கப்பட்டார்.
அருளாளர் மரிய தொமேனிக்கோ மாந்தோவானி அவர்கள், 1862ம் ஆண்டு இத்தாலியின் கார்தா ஏரிக்கரையில் அமைந்துள்ள காஸ்தெலெத்தோவில் பிறந்தவர். இவர், அருளாளர் ஜூசப்பே நாஷிம்பேனி அவர்களோடு இணைந்து திருக்குடும்ப சிறிய அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். தகான் இறக்கும்வரை தன் சபையை வழிநடத்திய இவர், 1934ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இறைபதம் அடைந்தார். 2003ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரிய தொமேனிக்கோ மாந்தோவானி அவர்களை அருளாளராக அறிவித்தார்
இந்த பத்து அருளாளர்களில் ஏழு பேர் துறவு சபைகளை நிறுவியவர்கள். மூவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐவர் இத்தாலி நாட்டவர். ஒருவர் நெதர்லாந்தையும் ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்.
மே 15, இஞ்ஞாயிறு 10 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்
மே 15, இஞ்ஞாயிறு 10 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்கள் உட்பட திருத்தந்தையோடு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவர்
மேரி தெரேசா: வத்திக்கான்
மே 15, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் கூட்டுத்திருப்பலியில், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் பாஸ்கா கால 5ம் ஞாயிறு திருப்பலியில், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்கள் உட்பட திருத்தந்தையோடு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவர்.
இந்தியப் பிரதிநிதிகள்
தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திருமிகு பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும், இந்தியாவின் முதல் பொதுநிலைப் புனிதர் மற்றும், தமிழகத்தின் முதல் புனிதராகச் சிறப்புப்பெறும் அருளாளர் தேவசகாயம் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் திருப்பலியில் பங்குபெற உரோம் வந்துள்ளனர். இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான இந்தியர்களும் வந்திருக்கின்றனர்.
இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், கேரளாவின் சீரோ மலபார் வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கார வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், தமிழக ஆயர் பேரவைத் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி, பாண்டிச்சரி கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், கோட்டாறு ஆயர் நசரேன் சூசை, கோயம்புத்தூர் ஆயர் தாமஸ் அக்குவினாஸ், தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி, பாளையங்கோட்டை ஆயர் அந்தோனி சவரிமுத்து, சேலம் ஆயர் அருள்செல்வம் இராயப்பன், வாரனாசி ஆயர் யூஜின் ஜோசப் உட்பட இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இந்தியத் திருஅவைத் தலைவர்கள் உட்பட பல்வேறு நாடுகளின் ஐம்பது கர்தினால்கள், 150 ஆயர்கள், 150 அருள்பணியாளர்கள் இக்கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகின்றனர்.
10 அருளாளர்கள்
அருளாளர்கள் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; லாசருஸ் தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோரைப் புனிதர்களாக அறிவிக்கின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மாலை திருவழிபாடு
மேலும், மே 14, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 3.15 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை இரவு 6.45 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தலைமையேற்று மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் நினைவு மாலை திருவழிபாட்டை நிறைவேற்றினார். இதில் இந்தியத் தலத்திருஅவை பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், ஏராளமான பொது நிலையினர் பங்குபெற்றனர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நடைபெற்ற இத்திருவழிபாட்டில், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வு வத்திக்கான் செய்திகளின் யுடியூப் வழியாக தமிழில் வழங்கப்படுகிறது இந்நேரடி வர்ணனை, 17790 கிலோ ஹெர்ட்ஸ் சிற்றலை அலைவரிசையிலும், வெப் வானொலி அலைவரிசை 11லிலும் ஒளிபரப்பப்படுகின்றது.
இந்த பத்து அருளாளர்களில் இருவர் மறைசாட்சிகள். ஏழு பேர் துறவு சபைகளை நிறுவியவர்கள். மூவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐவர் இத்தாலி நாட்டவர். ஒருவர் நெதர்லாந்தையும் ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்.
மே 15, புனிதர்பட்டமளிப்பு திருப்பலி தமிழில் நேரடி ஒலி-ஒளிபரப்பு
மே 15, புனிதர்பட்டமளிப்பு திருப்பலி தமிழில் நேரடி ஒலி-ஒளிபரப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
மே 15, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், மறைசாட்சி லாசருஸ் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலி, வத்திக்கான் ஊடகத்தின் வழியாக, தமிழ் உட்பட ஐரோப்பிய மொழிகளில், நேரடியாக ஒளி-ஒலி பரப்பப்படும்.
புனிதர்பட்டமளிப்பும், விண்ணக அரசியே மனமகிழ்வாய் செபமும் இணைந்த இத்திருப்பலி தமிழில் 17790 கிலோ ஹெர்ட்ஸ், இந்தியாவுக்கென்று ஆங்கிலத்தில் 21650 கிலோ ஹெர்ட்ஸ் ஆகிய சிற்றலை அலைவரிசைகளிலும், வத்திக்கான் செய்திகளின் யுடியூப் வழியாக தமிழில் வெப் வானொலி அலைவரிசை 11லிலும் ஒலி-ஒளி பரப்பப்படும். .
வரும் ஞாயிறன்று வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்திலிருந்து, திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், அருளாளர்கள் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; இலாசருஸ் தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோருக்கு புனிதர் பட்டமளிப்பு, அதைத் தொடர்ந்து விண்ணக அரசியே மனமகிழ்வாய் செபம் நடைபெறும்.
மேலும், புனிதர்பட்டமளிப்பும், விண்ணக அரசியே மனமகிழ்வாய் செபமும் இணைந்த இத்திருப்பலி, தமிழில் https://www.youtube.com/watch?v=95NAgPgRZ6M என்ற முகவரியிலும் ஒளி பரப்பப்படும்.
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...