Saturday, 25 January 2014

விரைவில் தாஜ்மஹாலின் உட்புறத்தை பார்வையிடலாம்

விரைவில் தாஜ்மஹாலின் உட்புறத்தை பார்வையிடலாம்

Source: Tamil CNN
 1882468410Untitled-1
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலின் உட்புறத்துக்குச் சென்று பார்வையிட வெள்ளிக்கிழமை தோறும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
இது குறித்து ஆக்ரா நகரத்தின் மண்டல ஆணையர் பிரதீப்பட்னாகர் கூறுகையில், தாஜ்மஹாலின் உட்புறத்ததை சுற்றிப்பார்ப்பதற்கு இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதற்கு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் எனவும், வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டணமாக 100 அமெரிக்க டொலர் எனவும் வசூலிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...