Friday, 24 January 2014

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைக்க அனுமதி

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைக்க அனுமதி

Source: Tamil CNN
 sikh-06ca9f93f1b218d79b89bd09f51f3208956f9ac4-s6-c30
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்களின் மத சம்பந்தப்பட்ட அடையாளங்களை ராணுவ சேவைகளுக்கு எந்தவிதப் பாதகங்களையும் ஏற்படுத்தாத அளவில் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நாட்டு ராணுவத் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனிலிருந்து வெளிவந்துள்ள அறிவிப்பில் தங்களது விதிமுறையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக முதன் முதலாக ஒரு பொது கொள்கை தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் சீக்கியர்கள் தங்களின் மத அடையாளங்களான தலைப்பாகை அல்லது தாடி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இந்த விதிமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களின் ராணுவப் பணிக்கான தயார் நிலையிலோ, பணிகளை நிறைவேற்றுவதிலோ, அவர்கள் சார்ந்த பிரிவின் ஒருமித்த ஒழுக்கம் மற்றும் அவர்களின் நல்ல தரம் பாதிக்கப்படாத வகையில் ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தங்களின் மத கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கமாண்டர் நடே கிரிஸ்டென்சன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவப் பிரிவின் இலக்கு, பாதுகாப்பு போன்றவை பிரச்சினைக்கு உட்படுத்தப்படாத வகையில் ராணுவ வீரர்களுக்கான நேர்த்தியாக வாரப்பட்ட ஒட்ட வெட்டிய தலைமுடி போன்ற விதிமுறைகளுக்குப் பதிலாக வீரர்களின் மத வெளிப்பாட்டினைக் காண்பிக்கும் நீண்ட தலைமுடி, தாடி மற்றும் தலைப்பாகை, சின்னங்கள் போன்றவை அனுமதிக்கப்படும் என்றும் ஆனால், தலைக்கவசம், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் போன்ற சிறப்பு உடைகளுக்குத் தடை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஆடை வகைகளை உபயோகிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...