2014ம் ஆண்டில் உயரப்போகும் தங்கம் விலை! அதிர்ச்சி தகவல்
2014ம் ஆண்டில் தங்கம் விலையானது 10 கிராமிற்கு உச்சக்கட்டமாக 33,000 ரூபாயை தொடவுள்ளதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ரித்தி சித்தி புல்லியன்ஸ் லிமிடெட் (RSBL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரித்திவிராஜ் கோத்தாரி இது குறித்து கூறுகையில், நடப்பாண்டில் தங்கத்தின் சராசரி விலை 10 கிராமிற்கு 28,000 ரூபாயாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் அடிப்படை விலை ஒரு அவுன்சுக்கு 1375 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள் நாட்டுச் சந்தையில், தங்கத்தின் விலை நிலை 10 கிராமிற்கு 25000 முதல் 33000 ஆயிரம் வரையும், அடிப்படை விலை சராசரியாக ரூபாய் 28000 வரையும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளியின் அடிப்படை விலை சராசரியாக ஒரு கிலோவிற்கு 2500 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்றும் உள்நாட்டு சந்தையில் அதன் சராசரி விலை கிலோவிற்கு 45000 ரூபாய் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெள்ளியின் வர்த்தக விலை நிலைகள் ரூபாய் 37,000-லிருந்து 55,000 வரை இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கோத்தாரி குழுமமான RSBL நிறுவனம் விலை உயர்ந்த உலோகங்கள், சிறப்பு உலோக பார்கள், மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட நாணயம் ஆகிய வர்த்தக செயல்பாடுகளில ஈடுபட்டுள்ளது. பன்னிரண்டு வருட தொடர்ந்த விலை உயர்வை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 2013 ம் ஆண்டு 28 சதவிகித சரிவை சந்தித்தது. இது 1981ம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத மிகக் கூர்மையான சரிவாகும்.
2012-13ம் ஆண்டில் 88 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு உச்சத்தை எட்டிய நடப்புக்கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு தங்க முதலீடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இந்தியாவின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 50 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்குக் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2011ம் ஆண்டில் ஒரு அவுன்சுக்கு 1,910 அமெரிக்க டொலர் என்ற உச்சத்தைத் தொட்ட 24 கேரட் தங்கம் அதன் பின் அப்போது தான் சரிவடைந்துள்ளதாக கோத்தாரி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment