Tuesday, 28 January 2014

மறைந்த பாப்பரசரின் குருதி கொண்ட குப்பியை காணவில்லை

மறைந்த பாப்பரசரின் குருதி கொண்ட குப்பியை காணவில்லை

Source: Tamil CNN
 john-paul-II
மறைந்த பாப்பரசர் 2ம் ஜான் பாலின் (இரண்டாம் அருள் சின்னப்பர்) குருதி வைக்கப்பட்டிருக்கும் புனிதக் குப்பியைத் தேடி இத்தாலியப் பொலிசார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
பாப்பரசரின் குருதி அடங்கிய புனிதக் குப்பி திருட்டுப் போயுள்ளது. பாப்பரசரின் குருதியில் நனைக்கப்பட்ட ‘புனித துணித் துண்டொன்று’ மத்திய இத்தாலிப் பிராந்தியமான அப்ரூஸோவில் சிறிய தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமையன்று தேவாலயத்தை உடைத்து அந்த புனிதப் பொருள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விலை மதிக்கமுடியாத இந்தத் திருப்பொருள் போன்று உலகிலேயே இன்னும் இரண்டு தான் உள்ளதாகக் கருதப்படுகிறது.
போலந்து நாட்டவரான முன்னாள் பாப்பரசருக்கு இந்த மத்திய இத்தாலி மலைப்பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. வத்திக்கான் வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விடுபட நினைக்கும்போதேல்லாம் பாப்பரசர் இங்கு சென்றுதான் மன அமைதி பெறுவார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...