செவ்வாயில் புதுமையான பாறைகள் : வியக்கும் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில், புதுமையான பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்காவின், “நாசா’ விண்வெளி ஆய்வு நிறுவனம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு, “ஆப்பர்சுனிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம், செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள பாறைகளை படம் எடுத்து அனுப்பியுள்ளது. நாசா விஞ்ஞானி, ஸ்டீவ் ஸ்குவேர்ஸ், குறிப்பிடுகையில், “”இந்தப் பாறையின் விளிம்புகள், வெண்மை நிறமாகவும், மையப் பகுதி, அடர் சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது; இது போன்ற பாறையை இதற்கு முன் கண்டதில்லை; இதில், கந்தகம் மற்றும் மெக்னீஷியம் அதிகளவில் காணப்படுகிறது,” என்றார்.
No comments:
Post a Comment